நீ வா ராசா.. 2 புது Samsung 5G போன்கள் அறிமுகமான வேகத்தில் பழைய 5ஜி மாடல் மது ரூ.11,500 டிஸ்கவுண்ட்!

3 days ago
ARTICLE AD BOX

நீ வா ராசா.. 2 புது Samsung 5G போன்கள் அறிமுகமான வேகத்தில் பழைய 5ஜி மாடல் மது ரூ.11,500 டிஸ்கவுண்ட்!

Mobile
oi-Muthuraj
| Published: Friday, February 21, 2025, 16:50 [IST]

ரூ.9,499 என்கிற ஆபர் விலையில் இந்தியாவில் வாங்க கிடைக்கும் சாம்சங்கின் புதிய கேலக்ஸி எப்06 5ஜி (Samsung Galaxy F06 5G) ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே விற்பனையில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்க.. சாம்சங் நிறுவனம் ஆனது அதன் கேலக்ஸி ஏ06 5ஜி (Samsung Galaxy A06 5G) மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இது 10,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் பழைய சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றானது ரூ.11,500 வரையிலான டிஸ்கவுண்ட்டை பெற்று ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. அது சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி (Samsung Galaxy M35 5G) ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன? அமேசானில் கிடைக்கும் ஆபர் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

 பழைய 5ஜி மாடல் மது ரூ.11,500 டிஸ்கவுண்ட்!

அசல் விலை VS ஆபர் விலை: பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியாவில் (Amazon India) சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போன் மீது முழுதாக ரூ.11,500 வரை டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 39% நேரடி தள்ளுபடியை பெற்று அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.24,499 க்கு பதிலாக ரூ.14,999 க்கு வாங்க கிடக்கிறது.

இதோடு சேர்த்து பெடரல் வங்கி கிரெடிட் கார்டில் (Federal Bank Credit Card) ரூ.2000 தள்ளுபடியும் கிடைக்கிறது. இப்படியாக சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.12,999 க்கு கொண்டுவர முடியும். அதாவது முழுதாக ரூ.11,500 விலை குறைக்க முடியும். இந்த ஆபர் சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போனின் அனைத்து 3 கலர் ஆப்ஷன்களில் அணுக கிடைக்கிறது

சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (1000 nits peak brightness) உடனான 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளேவை (Super AMOLED Infinity-O Display) கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை இது மாலி-ஜி68 எம்பி5 ஜிபியு (Mali-G68 MP5 GPU) உடனாக ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octacore Exynos 1380) சிப்செட்டை பேக் செய்கிறது. 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என்கிற 2 வேரியண்ட்களில் வரும் இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை இது 50 எம்பி ப்ரைமரி கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது, முன்பக்கத்தில் 13 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போன் ஆனது 6000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது,. மேலும் இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (25W fast charging) ஆதரவையும் கொண்டுள்ளது.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகிய கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இது சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவு உடனான ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Samsung Galaxy M35 5G gets Discount in Amazon After Galaxy F06 5G Galaxy A06 5G India launch
Read Entire Article