சாம்ராஜ்யமே ஆடிப்போச்சு.. OLED டிஸ்பிளே.. 24GB ரேம்.. 1TB மெமரி.. 7050mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. எந்த போன்?

4 days ago
ARTICLE AD BOX

சாம்ராஜ்யமே ஆடிப்போச்சு.. OLED டிஸ்பிளே.. 24GB ரேம்.. 1TB மெமரி.. 7050mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. எந்த போன்?

Mobile
oi-Harihara Sudhan
| Published: Thursday, February 20, 2025, 19:03 [IST]

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே ஆடிப்போச்சு என்று சொல்லும்படி 24 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, ஓஎல்இடி டிஸ்பிளே, 7050mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், அண்டர் டிஸ்பிளே செல்பீ ஷூட்டர், 11 லேயர் கூலிங் சிஸ்டம் போன்ற கனவிலும் நினைக்காத பிரீமியம் பீச்சர்களுடன் ரெட்மேஜிக் 10 ப்ரோ கோல்டன் சாகா லிமிடெட் எடிஷன் (REDMAGIC 10 Pro Golden Saga Limited Edition) களமிறங்கி இருக்கிறது. இந்த சாகா எடிஷனில் பீச்சர்கள், விலை, விற்பனை விவரங்கள் இதோ.

ரெட்மேஜிக் 10 ப்ரோ கோல்டன் சாகா எடிஷன் அம்சங்கள் (REDMAGIC 10 Pro Golden Saga Edition Specifications): இந்த சாகா எடிஷனில் அண்டர் டிஸ்பிளே கேமராவுடன் 6.85 இன்ச் (2688 × 1216 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த பிஓஈ கியூ9பிளஸ் (BOE Q9+) டிஸ்பிளே மாடலில் 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

சாம்ராஜ்யமே ஆடிப்போச்சு.. OLED டிஸ்பிளே.. 24GB ரேம்.. 1TB மெமரி!

மேலும், கேமிங் பிரியர்களுக்காக 960Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. இதுபோக 2592Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டுள்ளது. பிரத்யேக கேமிங் பீச்சர்களுடன் ரெட்மேஜிக் ஓஎஸ் 10 (REDMAGIC OS 10) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Octa Core 3nm Snapdragon 8 Elite) சிப்செட் உள்ளது.

பிரீமியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த ரெட்மேஜிக் 10 ப்ரோ கோல்டன் சாகா எடிஷனில் 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கிடைக்கிறது. இந்த ரேமில் விர்ச்சுவல் கிடையாது. பிரீமியம் சென்சார்களுடன் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது.

ஆகவே, மெயின் கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி50ஈ40 (OmniVision OV50E40) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. அதேபோல அல்ட்ரா வைடு கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி50டி (OmniVision OV50D) சென்சாரும் மேக்ரோ கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி02எப்10 (OmniVision OV02F10) சென்சாரும் கிடைக்கிறது. செல்பீ ஷூட்டரிலும் சென்சார் உள்ளது.

ஆகவே, ஓம்னிவிஷன் ஓவி16ஏ10கியூ (OmniVision OV16A1Q) சென்சாருடன் 16 எம்பி செல்பீ ஷூட்டர் (அண்டர் டிஸ்பிளே) கிடைக்கிறது. இந்த ரெட்மேஜிக் 10 ப்ரோ கோல்டன் சாகா எடிஷன் போனில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7050mAh பேட்டரி கிடைக்கிறது. 11 லேயர் கூலிங் சிஸ்டம் கிடைக்கிறது. கேமிங் அவுட்புட் கொடுக்க ரெட் கோர் ஆர்3 (Red Core R3) சிப்செட் கிடைக்கிறது.

மேலும், கூலிங் ஏர் டக்ட் (Cooling Air Duct) மற்றும் ஹை ஸ்பீட் சென்ட்ரிபியூகள் பேன் (High Speed Centrifugal Fan) போன்ற பேட்டரி ஹீட் கன்ட்ரோல் பீச்சர்கள் கிடைக்கிறது. கேமிங் எஃபெக்ட் மற்றும் கன்ட்ரோல்களை கொடுக்க ஷோல்டர் டிரிகர் பட்டன்கள் (Shoulder Trigger Buttons), கேம் ஸ்பேஸ் ஸ்விட்ச் (Game Space Switch) மற்றும் ஆர்ஜிபி லைட் (RGB Light) கிடைக்கிறது.

இந்த ரெட்மேஜிக் 10 ப்ரோ கோல்டன் சாகா எடிஷனின் விலை ரூ.1,30,210ஆக இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. ஆகவே, இந்தியா உள்பட சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா, தாய்லாந்து போன்ற ஆசிய-பசிபிக் நாடுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. ப்ரீ-ஆர்டர் தொடங்கிவிட்டது. ரெட்மேஜிக் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
REDMAGIC 10 Pro Golden Saga Limited Edition With 24GB RAM Launched Check Specifications Price
Read Entire Article