சாம்பியன்ஸ் டிராபி: 11 ஆயிரம் ரன்களை கடந்து ரோகித் சர்மா சாதனை.. சச்சின் சாதனை முறியடிப்பு

4 days ago
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபி: 11 ஆயிரம் ரன்களை கடந்து ரோகித் சர்மா சாதனை.. சச்சின் சாதனை முறியடிப்பு

Published: Thursday, February 20, 2025, 19:41 [IST]
oi-Javid Ahamed

துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மிகப்பெரிய மைல்கல் ஒன்றை தொட்டிருக்கிறார். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதை அடுத்து ஜேக்கர் அலி மற்றும் தவ்ஹீத் ஹிர்தாய் ஆகியோர் அபாரமாக பார்ட்னர்ஷிப் சேர்த்து வங்கதேச அணியை சரி விலிருந்து மீட்டனர். இதில் தவ்ஹீத் சதம் விளாச வங்கதேச அணி 228 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து இந்திய அணி 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கியது.

Champions Trophy 2025 Ind vs Ban Rohit Sharma virat kohli

ஆடுகளம் தோய்வாக இருக்கும் என்பதால் பவர் பிளேவை பயன்படுத்திக் கொண்டு இந்திய அணி அதிக அளவு ரன்களை சேர்க்க முயற்சித்தது. இதன் காரணமாக ரோகித் சர்மா ஆரம்பம் முதலே அதிரடியை காட்டினார். வங்கதேச பந்துவீச்சை பௌண்டரிக்கு விரட்டிய ரோகித் சர்மா சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.

இதன் மூலம் 11 ஆயிரம் ரன்களை கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனைக்கு கிடைத்தது. இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, கங்குலி ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையும் ரோகித் சர்மா படைத்துள்ளார்.

விராட் கோலி 221 இன்னிங்சில் இந்த மைல் கல்லை எட்டிய நிலையில் ரோகித் சர்மா 261 இன்னிங்சில் எட்டி இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 276 இன்னிங்ஸிலும், பாண்டிங் 286 இன்னிங்சிலும், கங்குலி 288 இன்னிங்சிலும் இந்த மைல்கல்லை எட்டி இருந்தார்கள். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களையும், ரோகித் சர்மா தான் விராட் கோலிக்கு பிறகு அதிவேகமாக எட்டி சாதனை படைத்து இருந்தார்.

பத்தாயிரம் ரன்னில் இருந்து 11 ஆயிரம் ரன்களை தொட ரோகித் சர்மா வெறும் இருபது இன்னிங்ஸ் மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கிறார். ரோகித் சர்மா முதல் ஆயிரம் ரன்களை எடுக்க தான் 43 இன்னிங்ஸ் எடுத்துக் கொண்டார். அடுத்த ஆயிரம் ரன்ளை சேர்க்க 39 இன்னிங்ஸும் ,2000 லிருந்து 3000 வர 21 இன்னிங்ஸூம், 3 ஆயிரத்திலிருந்து 4000 ரன்கள் வர 23 இன்னிங்ஸும் எடுத்துக் கொண்டார். மிகவும் அதிவேகமாக 4 ஆயிரத்திலிருந்து 5000 ரன்கள் வர ரோகித் வெறும் 16 இன்னிங்ஸ் மட்டுமே ரோகித் சர்மா எடுத்துக் கொண்டார்.

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Thursday, February 20, 2025, 19:41 [IST]
Other articles published on Feb 20, 2025
English summary
Champions Trophy Ind vs Ban- Rohit sharma reached 11000 runs milestone with fewer innings than sachin
Read Entire Article