கேமிங்ல இவருதான்.. 16GB ரேம்.. 512GB மெமரி.. 144Hz ரெஃப்ரெஷ் ரேட்.. RTX 3050A கிராபிக்ஸ்.. எந்த மாடல்?

9 hours ago
ARTICLE AD BOX

கேமிங்ல இவருதான்.. 16GB ரேம்.. 512GB மெமரி.. 144Hz ரெஃப்ரெஷ் ரேட்.. RTX 3050A கிராபிக்ஸ்.. எந்த மாடல்?

Gadgets
oi-Harihara Sudhan
| Published: Wednesday, March 12, 2025, 15:35 [IST]

இந்தியாவில் இருக்கும் கேமிங் பிரியர்களை தட்டித் தூக்கும்படியான பீச்சர்களுடன் ஆசஸ் டியூஎப் கேமிங் எப்16 (ASUS ROG TUF Gaming F16) லேப்டாப் களமிறங்கி இருக்கிறது. என்விடியா ஜிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3050ஏ கிராபிக்ஸ் கார்டு, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி போன்ற பீச்சர்களில் மிரளவிடுகிறது. விண்டோஸ் 11 ஓஎஸ் மற்றும் எஸ்எம் ஆபீஸ் 365 பேசிக் போன்றவற்றையும் கொடுக்கிறது. இந்த ஆசஸ் டியூஎப் கேமிங் எப்16 மாடலின் விவரங்கள் இதோ.

ஆசஸ் டியூஎப் கேமிங் எப்16 அம்சங்கள் (ASUS TUF Gaming F16 Specifications): இந்த கேமிங் மாடலில் 16 இன்ச் (1920 x 1200 பிக்சல்கள்) ஆன்டி-கிளார் ஐபிஎஸ் (Anti-Glare IPS) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

கேமிங்ல இவருதான்.. 16GB ரேம்.. 512GB மெமரி.. 144Hz ரெஃப்ரெஷ் ரேட்!

விண்டோஸ் 11 ஹோம் (Windows 11 Home) ஓஎஸ் மற்றும் இன்டெல் கோர் 5 (Intel Core 5) ப்ராசஸர் கிடைக்கிறது. இந்த ஓஎஸ் மூலம் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் ஹோம் 2024 (Microsoft Office Home 2024) மற்றும் மைக்ரோசாஃப்ட் 365 பேசிக் (Microsoft 365 Basic) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப கிராபிக்ஸ் கார்டை பேக் செய்துள்ளது.

கேமிங் பிரியர்கள் விரும்பும் என்விடியா ஜிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3050ஏ ஜிபியு (NVIDIA GeForce RTX 3050A GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கிறது. இதில் 2145MHz பூஸ்ட் க்ளாக் கிடைக்கிறது. இதுபோக 50W + 15W டைனாமிக் பூஸ்ட் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த கிராபிக்ஸ் கார்டில் லாக்-ப்ரீ கேமிங் அனுபவம் எதிர்பார்க்கலாம்.

இந்த ஆசஸ் டியூஎப் கேமிங் எப்16 லேப்டாப்பில் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கிடைக்கிறது. இதில் 32 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி மெமரிக்கான கூடுதல் சப்போர்ட் செய்து கொள்ளலாம். வீடியோ மட்டுமல்லாமல், ஆடியோவிலும் மிரளவிடுகிறது. ஆகவே, ஆடியோவை பொறுத்தவரையில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கிடைக்கிறது.

இதுபோக ஹை-ரெஸ் (Hi-Res) சப்போர்ட் மற்றும் ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன் (Al Noise Cancelling) டெக்னாலஜி கிடைக்கிறது. ஆனால், இது ஹெட்போன்களில் மட்டுமே அவுட்புட் கொடுக்கும். லேப்டாப் ஸ்பீக்கர்களில் நாய்ஸ் கேன்ஷலேஷன் எதிர்பார்க்க முடியாது. ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 56WHr பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது.

இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் வெறும் 30 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த ஆசஸ் டியூஎப் கேமிங் எப்16 லேப்டாப்பில் 720P ரெசொலூஷன் கொண்ட எச்டி (HD) கேமரா கிடைக்கிறது. பில்ட்-இன் மைக்ரோபோன் (Built-in Microphone) வருகிறது. பேக்லிட் சிக்லெட் கீபோர்ட் (Backlit Chiclet Keyboard) உள்ளது.

கனெக்டிவிட்டியை பார்க்கையில், வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கிடைக்கிறது. மேலும், வழக்கமான டைப்-சி போர்ட், ஜி-சிங்க், எச்டிஎம்ஐ, காம்போ ஆடியோ, எல்ஏஎன், டிசி-இன் போன்ற போர்ட்கள் கிடைக்கின்றன. 2.20 கிலோ எடை வருகிறது. FX607VBR என்னும் மாடலில் ஆர்டருக்கு கிடைக்கிறது.

அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஆசஸ் ஈ-ஸ்டோர் ஆகியவற்றில் கிடைக்கிறது. இந்த ஆசஸ் டியூஎப் கேமிங் எப்16 லேப்டாப்பின் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.80,990ஆக இருக்கிறது. அந்தந்த ஈ-காமர்ஸ் தளங்களுக்கு ஏற்ப பேங்க் டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
ASUS TUF Gaming F16 With Intel Core 5 16GB RAM Launched India Check Specifications Price
Read Entire Article