ARTICLE AD BOX
எழுதி வெச்சிக்கோங்க... இந்த புதிய Oppo போன் ஹிட் அடிக்கும்! எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி (Oppo F29 Pro 5G) போனின் அறிமுகம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த புதிய ஒப்போ போன் இந்த மார்ச் இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Oppo F29 Pro 5G specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் (Dimensity 7300 chipset) உடன் ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

அதேபோல் 6.67-இன்ச் குவாட் கர்வ்ட் அமோலெட்(quad-curved AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. இதுதவிர பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளது. பின்பு இந்த போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்களும் உள்ளன.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக ColorOS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6000mAh பேட்டரி வசதியுடன் ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி போனில் உள்ளன. மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய ஒப்போ போன் வெளிவரும். பின்பு இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.
மேலும் ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.25,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.