ARTICLE AD BOX
இறங்கி அடித்த BSNL.. வெறும் ரூ.397-க்கு 150 நாட்கள்.. ரூ.897-க்கு 180 நாட்கள்.. வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு நம்ப முடியாத விலைக்கு கிடைக்கும் 150 நாட்கள், 160 நாட்கள் மற்றும் 180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை (Prepaid Plan) இப்போது தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டங்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால், சலுகைகளுக்கும் வேலிடிட்டிக்கும் நடுவில் கவனமாக இருக்க வேண்டும். ஆகவே, சலுகைகளை முழுவதும் பார்த்தால் மட்டுமே கஸ்டமர்களுக்கு புரிய வரும். இப்போது, ஒவ்வொரு திட்டத்தின் விவரங்களை வரிசையாக தெரிந்து கொள்வோம்.
பிஎஸ்என்எல் 150 நாட்கள் திட்டம் ரூ 397 (BSNL 150 Days Plan Rs 397): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 150 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டி (Service Validity) கிடைக்கிறது. ஆனால், வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் 150 நாட்களுக்கும் கொடுக்கப்படாது. முதல் 30 நாட்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும். ஆகவே, மீதமுள்ள 120 நாட்களுக்கு சிம் ஆக்டிவ் (SIM Active) மட்டுமே கிடைக்கும்.

இந்த நாட்களில் இன்கம்மிங் கால்கள், எஸ்எம்எஸ்கள் தொடர்ந்து கிடைக்கும். இப்போது, 30 நாட்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது என்பதை பார்ப்போம். 30 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் கால்கள் (Roaming Calls), 100 எஸ்எம்எஸ் மற்றும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா உள்ளது.
பிஎஸ்என்எல் 160 நாட்கள் திட்டம் ரூ 997 (BSNL 150 Days Plan Rs 997): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 30 நாட்களுக்கு சலுகை, மற்ற நாட்களுக்கு சிம் ஆக்டிவ் சலுகை என்று கிடையாது. 160 நாட்கள் முழுவதும் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பெற்று கொள்ள முடியும். ஆகவே, 5 மாதங்களுக்கு மேல் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம்.
இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். 160 நாட்களுக்கு மொத்தமாக 320 ஜிபி டேட்டாவும் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகைகளை இந்த திட்டம் கொடுக்கிறது.
பிஎஸ்என்எல் 180 நாட்கள் திட்டம் ரூ 897 (BSNL 150 Days Plan Rs 897): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் வேலிடிட்டி நாட்கள் முழுவதும் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. ஆனால், டேட்டா சலுகை மட்டும் லம்ப்-சம் முறையில் கொடுக்கப்படுகிறது. அதாவது, நாளொன்றுக்கு கிடைக்காமல், ரீசார்ஜ் செய்த உடனேயே மொத்தமாக கொடுக்கப்படுகிறது.
ஆகவே, 180 நாட்கள் வேலிடிட்டிக்கு 90 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. இந்த 90 ஜிபிக்கு பிறகு முந்தைய திட்டத்தில் பார்த்ததை போலவே 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது. இந்த டேட்டாவை தினசரிக்கு கணக்கிட்டால், 500 எம்பி கிடைக்கிறது. ஆனால், ஒரு நாளுக்கு இவ்வளவு என்ற கணக்கு இல்லை. தேவைப்படும்போது எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகையை பார்க்கையில், முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, நேஷனல் ரோமிங் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. இந்த மூன்று திட்டங்களில் எந்த திட்டம் உங்களது பட்ஜெட் மற்றும் தேவைக்களுக்கு ஏற்ப இருக்கிறது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.