‘இந்திய சுழற்பந்து வீச்சை அடித்து நொறுக்கணும்’ - சக வீரர்களுக்கு ஜாஸ் பட்லர் அறிவுரை

6 hours ago
ARTICLE AD BOX

Published : 24 Jan 2025 08:36 AM
Last Updated : 24 Jan 2025 08:36 AM

‘இந்திய சுழற்பந்து வீச்சை அடித்து நொறுக்கணும்’ - சக வீரர்களுக்கு ஜாஸ் பட்லர் அறிவுரை

<?php // } ?>

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி இந்தியாவின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜாஸ் பட்லர் மட்டும் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு 44 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் விளாசினார்.

இந்திய அணி சார்பில் வருண் சக்கரவர்த்தி 3, அக்சர் படேல் 2 விக்கெட்களை வீழ்த்தினர். மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னோய் விக்கெட்களை வீழ்த்தாவிட்டாலும் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார். இவர்கள் 3 பேரும் கூட்டாக 12 ஓவர்களை வீசி 67 ரன்களை மட்டுமே வழங்கினர். முன்னதாக தொடக்க ஓவர்களில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் கொடுத்திருந்தார். மிதவேகப்பந்து வீச்சாளரான ஹர்திக் பாண்டியா 42 ரன்களை வாரிக்கொடுத்த நிலையில் 2 விக்கெட் கைப்பற்றினார்.

133 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 12.5 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 34 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் விளாசினார். சஞ்சு சாம்சன் 26, திலக் வர்மா 19 ரன்கள் சேர்த்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

கொல்கத்தா போட்டிக்கு பின்னர் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறியதாவது: இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நாங்கள் விளையாட விரும்பிய ஆட்டத்தை மேற்கொள்ள முடியாமல் போனது. அவர்கள், சிறப்பாக பந்துவீசினார்கள். எங்கள் அணியில் உள்ள சில வீரர்கள் முதன்முறையாக இந்திய அணியில் சில சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டனர். சிறப்பாக விளையாட விரும்பினால், சுழற்பந்துவீச்சாளர்களை அழுத்தத்திற்கு உட்படுத்த வேண்டும் மற்றும் பாதுகாக்கக்கூடிய அளவிலான பெரிய ஸ்கோரை குவிக்க வேண்டும்.

எங்களுக்கு எதிராக இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கி தாக்குதல் தொடுப்பார்கள் என எதிர்பார்த்தோம். இந்திய அணியில் உள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் சிறந்த வீரர்கள். இதனால் எங்களது பேட்ஸ்மேன்கள் தனிப்பட்ட முறையில் வீரர்கள் திட்டங்கள் வகுத்து, இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அழுத்தத்தை திருப்ப வேண்டும்.

டி20 கிரிக்கெட்டில் நாங்கள் எப்போதும் ஆக்ரோஷமாக இருக்கவே முயற்சிக்கிறோம். 2015-ம் ஆண்டு முதல் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் நாங்கள் இந்த வழியையே கடைபிடித்து வருகிறோம். அதிலிருந்து ஒருபோதும் நாங்கள் விலகவில்லை. நான் எப்போதும் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடுவதை மிகவும் ரசிப்பேன். ஐபிஎல் தொடரும் உதவியாக உள்ளது. ஏனெனில் அந்த தொடரில் நடக்கும் முக்கிய விஷயம் ஏராளமான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பயிற்சி செய்யக்கூடிய நேரம் கிடைக்கும்.

இந்தியாவில் நீங்கள் விளையாடும் ஒவ்வொரு இடமும் கொஞ்சம் தனித்துவமானது என்று நான் நினைக்கிறேன். சென்னை ஆடுகளத்தில் விளையாடிய அனுபவம் கொண்ட பல வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர். சென்னை விளையாடுவதற்கு சிறந்த இடம். இது இந்த விளையாட்டுக்கு பல்வேறு சவால்களைக் கொண்டுவருகிறது, வெளிப்படையாக அதன் பிறகு விளையாட்டுகள். வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு விளையாடுவதுதான் இந்த விளையாட்டின் அழகு. இவ்வாறு ஜாஸ் பட்லர் கூறினார்.

இரு அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி நாளை (25-ம் தேதி) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article