ARTICLE AD BOX
இது வந்தா போதும்.. பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. WATER கேமரா.. 45W சார்ஜிங்.. 360 ஆர்மர் பாடி.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் அண்டர் வாட்டர் போட்டோகிராபி கேமராவுடன் ஓப்போ ரெனோ13 5ஜி சீரிஸ் வெளியாகியது. ஆனால், இந்த போன் பிரீமியம் மாடல்களாக வெளியாகிதால், விலை கூடுதலாக இருந்தது. ஆனால், இப்போது அதே அண்டர் வாட்டர் போட்டோகிராபி பீச்சர்களுடன் ஓப்போ எப்29 5ஜி (OPPO F29 5G) போன் பட்ஜெட்டில் களமிறங்க இருக்கிறது. இந்த ஓப்போவின் வெளியீட்டு தேதி மற்றும் முக்கிய பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மார்ச் 20ஆம் தேதி இந்த ஓப்போ எப்29 5ஜி வெளியாக இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வர இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டு தேதியுடன் டிசைன், கலர், ரெசிஸ்டன்ட் மற்றும் ரேம் பீச்சர்கள் வெளியாகி இருக்கின்றன. ஆகவே, இந்த ஓப்போ இரண்டு பிரீமியம் கலர்களில் வெளியாக இருக்கிறது.

இதில் கிளாசியர் (Glacier Blue) மற்றும் சாலிட் பர்பிள் (Solid Purple) களமிறங்க இருக்கின்றன. டூயல் கேமரா சிஸ்டம் மற்றும் பஞ்ச்-ஹோல் செல்பீ கிடைக்கிறது. பட்ஜெட்டில் அண்டர் வாட்டர் போட்டோகிராபி சப்போர்ட் கொடுக்கும்படி IP69 வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆர்மர் பாடி (Armour Body) கிடைக்க இருக்கிறது.
ஆகவே, 360 டிகிரி டேமேஜ் ப்ரூஃப் (Damage Proof) வருகிறது. இதன் மூலம் காபி, மில்க், டீ. சோடா உள்ளிட்ட 18 லிக்விட் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த ஓப்போ எப்29 5ஜி போனில் பட்டையை கிளப்பும் பேக்கப் கொடுக்கும்படியான பேட்டரி சிஸ்டம் இருக்கிறது. ஏனென்றால், பெரிய 6500mAh பேட்டரி வருகிறது. இதற்கு 45W சார்ஜிங் உள்ளது.
இந்த ஓப்போவில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. நெட்வொர்க் பூஸ்ட் (Network Boost) கொடுக்க ஹண்டர் ஆட்டெனா பூஸ்ட் (Hunter Antenna Boost) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், டிஸ்பிளே, சிப்செட் மற்றும் ஓஎஸ் போன்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. அதேபோல இந்த ஓப்போ எப்29 5ஜி போனின் விலை விவரங்களும் கசிந்து இருக்கின்றன. இந்த பட்ஜெட் ஓப்போ பிரியர்கள் மட்டுமல்லாமல், மற்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டு வைத்துள்ளது.
ஓப்போ எப்29 5ஜி அம்சங்கள் (OPPO F29 5G Specifications): இந்த ஓப்போவில் 50 எம்பி மெயின் கேமரா (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கிடைக்க இருக்கிறது. லேட்டஸ்ட் ஓப்போ மாடல்களில் கிடைக்கும் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்க இருக்கிறது. டைமன்சிட்டி சிப்செட், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வர இருக்கிறது.
6.7 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் கிடைக்க இருக்கிறது.
இந்த பீச்சர்களுடன் ரூ.23,000 பட்ஜெட்டில் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. மார்ச் 20ஆம் தேதி வெளியாக இருப்பதால், அடுத்தடுத்து பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாகவே வெளியாக இருக்கிறது. பட்ஜெட்டில் அண்டர் வாட்டர் கேமராவை எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு இந்த ஓப்போ எப்29 5ஜி போன் பக்கா ஆப்ஷனாக இருக்கும்.