ARTICLE AD BOX
ஆளுக்கொரு ஆர்டர்.. ரூ.1299-க்கு 1 வருட பேட்டரி.. Google ஃபைண்ட் மை டிவைஸ்.. 10 மீட்டர்கள் ரேஞ்ச்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஆண்ட்ராய்டு பிரியர்களும் அடித்து பிடித்து ஆர்டர் போடும்படியான அடிமட்ட விலையில் கூகுள் ஃபைண்ட் மை டிவைஸ் நெட்வொர்க், குளோபல் லோகேஷன் டிராக்கிங், 80dB அலாரம், 10 மீட்டர்கள் ரேஞ்ச், எக்ஸ்ட்ரா பேட்டரி போன்ற பீச்சர்களுடன் போட் டேக் (boAt TAG) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. கீஸ், லக்கேஜ், வாலெட், பேக் போன்றவற்றை எளிதாக கண்டுபிடிக்க உதவும் இந்த போட் டேக் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ப்ளூடூத் கனெக்டிவிட்டி மூலம் டிராக்கர்கள் வேண்டுமானால், மார்கெட்டில் பல்வேறு ப்ளூடூத் டேக்ஸ் (Bluetooth TAGs) கிடைக்கின்றன. இதில் ஜியோ டேக் அடிமட்ட விலையில் கிடைக்கிறது. இந்த விலையில் மற்ற நிறுவனங்களிடம் ப்ளூடூத் டிராக்கர்கள் கிடைக்காது என்று நினைத்த நேரத்தில் போட் நிறுவனம் அடிமட்ட விலைக்கு இந்த போட் டேக்கை களமிறக்கி இருக்கிறது.

போட் டேக் அம்சங்கள் (boAt TAG Specifications): இதுவொரு ப்ளூடூத் டிராக்கராக இருப்பதால், 10 மீட்டர்கள் வரையில் மட்டுமே ரேஞ்ச் கிடைக்கும். ஆகவே, அதற்கு மேல் டேக் சென்றுவிட்டால், டிராக் செய்ய முடியாது. ஆகவே, இந்த ரேஞ்ச்சில் வாலெட், லக்கேஜ், கீஸ் அல்லது ஹேண்ட் பேக் போன்ற எதில் இந்த போட் டேக்கை வைத்திருந்தாலும் எளிதாக கண்டுபிடித்து கொள்ளலாம்.
இதில் கூகுள் ஃபைண்ட் மை டிவைஸ் (Google Find My Device) டிராக்கிங் நெட்வொர்க் சப்போர்ட் உள்ளது. ஆகவே, கனெக்டிவிட்டி பக்காவாக எதிர்பார்க்கலாம். இந்த போட் டேக்கானது, ஆண்ட்ராய்டு டிவைஸ்களில் (Android Devices) மட்டுமே கனெக்டிவிட்டி கொடுக்கிறது. ஆகவே, ஆப்பிள் பிரியர்களுக்கு இப்போதைக்கு செட்டாகாது. செமி ரியல் டைம் (Semi Real Time) டிராக்கிங் வருகிறது.
ஆகவே, குளோபல் லோகேஷன் டிராக்கிங் (Global Location Tracking) கிடைக்கிறது. இதற்கு இன்டர்நெட் தேவை என்னும் சந்தேகம் இருக்கலாம். ஆனால், இதுவொரு ப்ளூடூத் டிராக்கர் மாடலாக இருப்பதால், வெறும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட டிவைஸ்கள் போதும், இந்த போட் டேக்கை பயன்படுத்தி கொள்ளலாம். 10 மீட்டருக்குள் டிராக் செய்யும்படி பார்த்து கொள்ளுங்கள்.
டிராக்கிங் மட்டுமல்லாமல், அலாரம் சப்போர்ட் கொடுக்கிறது. ஆகவே, 80dB ஆடியோ அவுட்புட்டில் அலாரம் கேட்கலாம். இதை டிராக் செய்து கொண்டு போகும்போது, கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், இந்த அலாரம் உதவியாக இருக்கும். இதுபோக அன்நவ்ன் டிராக்கர் அலெர்ட் (Unknown Tracker Alert) சப்போர்ட் கிடைக்கிறது. 1 வருடத்துக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும்.
ஆகவே, வருடம் முழுவதும் உங்களுக்கு ப்ளூடூத் டிராக்கிங் கொடுக்கிறது. இதுபோக கூடுதலாக ஒரு பேட்டரி கொடுக்கப்படும். இந்த பேட்டரி மூலம் மேலும், ஒரு வருடத்துக்கு டிராக் செய்து கொள்ளலாம். இந்த ப்ளூடூத் டிராக்கருக்கு 1 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது. பிளாக் (Black) கலரில் இதை ஆர்டர் செய்து கொள்ளலாம். இப்போது அறிமுக சலுகையில் கிடைக்கிறது.
வெறும் ரூ.1,299 விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விலையில் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அதேபோல போட் தளத்திலும் ஆர்டருக்கு கிடைக்கிறது. அடிமட்ட விலையில் ப்ளூடூத் டிராக்கர் வேண்டுமானால், இந்த போட் டேக்கை தேர்ந்தெடுக்கலாம். ஸ்மார்ட்வாட்ச், இயர்பட்ஸ், ஸ்பீக்கர் போன்றவற்றில் போட் பெயர் பெற்றிருப்பதால், இதில் நம்பலாம்.