ARTICLE AD BOX
Airtel ரீசார்ஜ் பண்ண போறீங்களா? 84 நாட்கள் வரை வேலிடிட்டி.. OTT.. அள்ளி கொடுக்கும் 3 பிளான்கள்..
ஜியோ (Jio) நிறுவனத்துக்குப் போட்டி கொடுக்கும் வகையில் புதிய புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி வருகிறது ஏர்டெல் (Airtel) நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பட்ஜெட் விலையில் அதிக டேட்டா மற்றும் அதிக சலுகைகள் வழங்கும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல். அந்த மூன்று திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1199 prepaid plan) ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.1199 திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளது. மேலும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), rewards mini subscription, ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 838 prepaid plan) ஆனது தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது. பின்பு 56 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (amazon prime subscription) வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம். இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதன்படி அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, தினசரி 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் போன்ற பல நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் உள்ளன.
ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 649 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். நீங்கள் ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இதில் உள்ளன.