ARTICLE AD BOX
ஆபர் விலையில் Apple-ன் புதிய iPhone 16e மாடல்.. எங்கே, எப்படி வாங்குவது?
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் புதிய ஐபோன் 16இ (iPhon 16e) மாடலை.. டக்கென்று ஆப்பிளின் பட்ஜெட்-விலை ஐபோன் என்று கூறிவிட முடியாது. ஏனென்றால் இது ரூ.60,000 - ரூ.90,000 என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை ரூ.50,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஐபோன் எஸ்இ 4 அல்லது ஐபோன் எஸ்இ 2025 மாடல் அறிமுகமாகி இருந்தால்.. ஒப்பீட்டளவில் இதை பட்ஜெட் விலை ஐபோன் என்று கூறி இருக்கலாம்.
ஆனாலும் கூட ஆப்பிள் ரசிகர்கள் மற்றும் ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் "ஐபோன் 16இ ஜுரம்" ஏற்கனவே பற்றிக்கொண்டது. ஐபோன் 16இ மாடலின் முன்பதிவுகள் இன்று (அதாவது பிப்ரவரி 21 ஆம் தேதி) முதல் தொடங்குகிறது. ஐபோன் 16இ மாடலின் விலை நிர்ணயம் என்ன? இந்த மாடலை எங்கு, எப்படி முன்பதிவு செய்வது? இதன் மீது என்னென்ன ஆபர் கிடைக்கும்? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

ஐபோன் 16இ விலை விவரங்கள் (iPhone 16e Price in India): இந்தியாவில் ஐபோன் 16இ மாடலின் பேஸிக் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,900 க்கும் மற்றும் ஹை-எண்ட் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஆப்ஷன்களுமே ஒயிட் மற்றும் பிளாக் கலர்களில் வாங்க கிடைக்கும்.
ஐபோன் 16இ எங்கே, எப்படி முன்பதிவு செய்வது (iPhone 16e Where and how to pre-order): ஆப்பிளின் இந்த லேட்டஸ்ட் ஐபோன் மாடலின் ப்ரீ-ஆர்டர் பிப்ரவரி 21 ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு தொடங்கும். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் தங்களுக்கான ஐபோன் 16இ மாடலை முன்பதிவு செய்யலாம்.
ஃபிளாக்ஷிப் ஆப்பிள் ஸ்டோர்களை தவிர, மூன்றாம் தரப்பு சில்லறை விற்பனையாளர்களின் வழியாகவும் ஐபோன் 16இ மாடலை முன்பதிவு செய்லாம். இப்படி செய்யும்போது அவர்களிடம், ஆப்பிளின் அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனையாளர் பேட்ஜ் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இப்போதைக்கு ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 16இ மீதான முன்பதிவு சலுகைகள் குறித்து எதையும் வெளியிடவில்லை. எங்களுக்கு தெரிந்து ப்ரீ-ஆர்டர் செயல்முறை தொடங்கியவுடன் சலுகைகள் அறிவிக்கப்படலாம்
தற்போதைய நிலையில், ஆப்பிள் இணையதளம் ரூ.4000 உடனடி தள்ளுபடியுடன் 24 மாதங்களுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களை பட்டியலிட்டுள்ளது. கூடவே ரூ.5000 முதல் ரூ.67000 வரையிலான டிரேட்-இன் சலுகையையும் முன்னிலைப்படுத்தியுள்ளது. ஐபோன் 16இ மாடலின் விற்பனை பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 16இ மாடலின் விரிவான அம்சங்கள் (iPhone 16e Full Specifications, Features): இது ஃபேஸ் ஐடி உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது ஐபோன் எஸ்இ சீரீஸில் காணப்படும் பாரம்பரிய ம்யூட் சுவிட்சுக்கு பதிலாக ஒரு ஆக்ஷன் பட்டனையும் கொண்டுள்ளது. இது ஆப்பிளின் ஏ18 சிப் மூலம் இயக்கப்படுகிறது. அதாவது ஐபோன் 16இ மாடல் ஆனது அதன் முன்னோடிகளை விட அதிக செயல்திறனை வழங்கும்.
ஐபோன் 16இ ஆனது சிங்கிள் 48எம்பி ஃப்யூஷன் ரியர் கேமராவுடன் வருகிறது, இது விரிவான ஹை ரெசல்யூஷன் புகைப்படங்களைப் பிடிக்கும் திறன் கொண்டது. இதன் கேமரா செட்டப் ஆனது 2எக்ஸ் டெலிஃபோட்டோ ஜூம் விருப்பத்தை வழங்குகிறது. முன்பக்கத்தில் ஐபோன் 16இ மாடலில் ஆட்டோஃபோகஸுடன் 12எம்பி ட்ரூ டெப்த் கேமரா உள்ளது.
பேட்டரி லைஃப் மற்றும் கனெக்டிவிட்டியை பொறுத்தவரை இது 26 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது என்று ஆப்பிள் கூறுகிறது. இந்த மாடல் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் சேட்டிலைட் வழியாக மெசேஜ்கள் மற்றும் எமர்ஜென்சி எஸ்ஓஎஸ்-களை அனுப்ப உதவும் செயற்கைக்கோள் இணைப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. சுவாரஸ்யமாக இதில் க்ராஷ் டிடெக்ஷனும் உள்ளது
எல்லாவாற்றை விட முக்கியமாக ஐபோன் 16இ மாடல் ஆனது ஏஐ அம்சங்களின் தொகுப்பான ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்-ஐ ஆதரிக்கிறது. ஜென்மோஜி, ரைட்டிங் டூல்ஸ் மற்றும் சாட்ஜிபிடி உடனான ஒருங்கிணைப்பு போன்ற டூல்கள் இதில் அடங்கும், இது பல்வேறு ஆப்களில் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும்.