அதிரவிடும் விலை.. சோனி கேமரா 6400mAh பேட்டரி.. இந்தியாவுக்கு வரும் புதிய iQOO போன்.. எந்த மாடல்?

4 days ago
ARTICLE AD BOX

அதிரவிடும் விலை.. சோனி கேமரா 6400mAh பேட்டரி.. இந்தியாவுக்கு வரும் புதிய iQOO போன்.. எந்த மாடல்?

Mobile
oi-Prakash S
| Published: Thursday, February 20, 2025, 20:40 [IST]

ஐக்யூ நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய போன் வரும் மார்ச் 11-ம் தேதி அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் தரமான அம்சங்களுடன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் ஐக்யூ நியோ 10ஆர் போனின் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ஆன்லைனில் கசிந்த தகவலின்படி 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R) ஸ்மார்ட்போன் ரூ.35,999 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் ஏற்கனவே வெளியான ஐக்யூ நியோ 10ஆர் போனின் அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதிரவிடும் விலை.. இந்தியாவுக்கு வரும் புதிய iQOO போன்.. எந்த மாடல்?

ஐக்யூ நியோ 10ஆர் அம்சங்கள் (iQOO Neo 10R Specifications): 6.78-இன்ச் 1.5K அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் இந்த அட்டகாசமான ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். 4500 நிட்ஸ் பிரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்று சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Qualcomm Snapdragon 8s Gen 3) சிப்செட் வசதியுடன் ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் Funtouch OS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஐக்யூ நியோ 10ஆர் போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஐக்யூ நியோ 10ஆர் போனை வாங்க முடியும் என்று கூறப்படுகிறது. பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

50எம்பி சோனி எல்ஒய்டி-600 (Sony LYT-600) பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் ஐக்யூ நியோ 10ஆர் போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் 5ஜி, 4ஜி, வைஃபை, ஜபிஎஸ், புளூடூத், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த அசத்தலான ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போனில் உள்ளன. IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust & Water Resistant) உடன் ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

6400mAh பேட்டரி உடன் இந்த ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. லூனார் டைட்டானியம் (Lunar Titanium) மற்றும் ப்ளூ ஒயிட் ஸ்லைஸ் (Blue White Slice) நிறங்களில் இந்த புதிய போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
iQOO Neo 10R Price Revealed Ahead of Launch: check details here
Read Entire Article