ARTICLE AD BOX

இந்தியாவில் பிரபலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஹோலி. இந்த ஆண்டு ஹோலி பண்டிகை வரும் மார்ச் மாதம் 13ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் தங்கி பணி புரியும் ஏராளமானோர் ஹோலி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் பயணிகளின் போக்குவரத்து தேவை மற்றும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மத்திய ரயில்வே துறை 28 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் மும்பையில் இருந்து புனே, நாக்பூர், மட்கா, நாந்தெட் ஆகிய பகுதிகளுக்கு இடையே இயக்கப்படுகிறது. மேலும் இந்த சிறப்பு ரயில்களில் ஏசி மற்றும் முன்பதிவு படுக்கை வசதிகள் உடன் பெட்டிகள் இருக்கும் என ரயில்வே செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.