ஹோலி கொண்டாட்டத்தின்போது ‘ரசாயன கலர் பொடி’ பூசிய கும்பல்.. 4 மாணவிகள் உடல்நிலை மோசம்!

2 hours ago
ARTICLE AD BOX

ஹோலி கொண்டாட்டத்தின்போது ‘ரசாயன கலர் பொடி’ பூசிய கும்பல்.. 4 மாணவிகள் உடல்நிலை மோசம்!

Bangalore
oi-Vignesh Selvaraj
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்​நாட​கா​வில் ஹோலி பண்டிகை கொண்​டாட்​டத்​தின்​போது பள்ளி மாணவி​கள் 7 பேர் மீது மர்ம கும்​பல் ரசாயனம் கலந்த கலர் ​பொடியை பூசினர். இதனால் மூச்​சுத் திணறல் ஏற்​பட்​ட​தால் மாணவிகள் 7 பேரும் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்​நாடக மாநிலம் கதக் மாவட்​டத்​தில் உள்ள லக்ஷ்மேஷ்வர் நகரில் நேற்று ஹோலி பண்​டிகை​யின்​போது, பள்ளி மாணவி​கள் 7 பேர் பேருந்து நிலை​யத்​தில் காத்திருந்தனர். அவர்கள் 8 ஆம் வகுப்பு, 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள். அப்​போது 3 இருசக்கர வாகனங்களில் வந்த மாணவர்கள் கும்​பல் அந்த மாணவி​கள் மீது ரசாயனம் கலந்த வண்​ணப் பொடிகளை வீசினர்.

Holi Karnataka

அந்த நேரத்தில் பேருந்து வந்ததால் அந்த மாணவிகள் அதில் ஏறினர். அவர்களை துரத்திச் சென்ற அந்த கும்பல், பேருந்தில் ஏறி அந்த மாணவிகள் மீது வண்ணப் பொடிகளைப் பூசியுள்ளது. அதில், பல்வேறு ரசாயனம் கலந்திருந்துள்ளது. இதனால் 7 பேருக்​கும் மூச்சுத் திணறல், இரு​மல், நெஞ்சு வலி ஏற்​பட்​டது.

இதுகுறித்து தகவலறிந்த போலீ​சார் உடனடியாக சம்பவ இடத்​துக்கு வந்​து, பாதிக்​கப்​பட்ட மாணவி​களை மீட்டு கதக் அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​தித்​தனர். 7 மாணவிகளில் 4 மாணவிகளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் மே சிகிச்சைக்காக GIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த பேருந்து நிலை​யத்​தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவு​களை ஆராய்ந்​து, ரசாயன பொடிகளை தூவிவிட்டு தப்பிய இளைஞர்​களை தேடும் பணி​யில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பான சூழல் நிலவுகிறது.

ஹோலி பண்டிகை கொண்டாடப் பயன்படுத்தும் வண்ணப் பொடிகள் சிலவற்றில் ரசாயனம் கலந்திருக்கும். இதை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால், ரசாயன வண்ண பொடிகள் பயன்படுத்துவது, சருமத்தை மேலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இத்தகைய பொடிகளை பயன்படுத்துவதையும் விற்பதையும் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
English summary
Four schoolgirls fell ill after a group of youths sprayed chemical-laced colors on them in Gadag district on the Holi festival.
Read Entire Article