ARTICLE AD BOX
ஹோலி கொண்டாட்டத்தின் போது இளம் நடிகையுடன் ஜாலி.. மில்க் பியூட்டியை கதறவிட்ட எக்ஸ் காதலர்?
சென்னை: மில்க் பியூட்டி நடிகையை சமீபத்தில் அவரது காதலர் கழட்டிவிட்ட சம்பவம் தான் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பல வருடங்களாகவே இந்த நடிகைக்கு யாருமே செட் ஆக மாட்டேங்கிறாங்களே என்றும் வாரிசு நடிகரும் காதலித்து திருமணம் வரை சென்ற நிலையில், கழட்டிவிட்டார். இப்போ இன்னொரு நடிகரும் காதலித்து லிவிங் டுகெதரில் அனைத்தையும் அனுபவித்து விட்டு கழட்டிவிட்டுட்டாரே என பேசி வருகின்றனர்.
நடிகருக்கு முன்பாக தான் ரொம்பவே ஹேப்பியாகவும் சந்தோஷமாகவும் இருப்பதாக காட்டிக் கொள்ள நினைத்த நடிகை அந்த ஹோலி கொண்டாட்டத்தை அவாய்டு பண்ணாமல் அங்கே வந்து கலந்துக் கொண்டு ஆட்டம் பாட்டம் என நடிகரின் கண் முன்னாடியே வெறுப்பேற்றியுள்ளார்.

ஆனால், பதிலுக்கு நடிகர் பண்ண அலப்பறையில் மில்க் பியூட்டி டிக்காஷன் பியூட்டியாக தீய்ந்து போய்விட்டார் என சினிமா வட்டாரத்தில் தற்போது கிசுகிசுக்கள் தீயாக பரவி வருகின்றன.
யூஸ் அண்ட் த்ரோ: அந்த நடிகர் இதுவரை சில நடிகைகளை யூஸ் அண்ட் த்ரோவாகத்தான் பயன்படுத்தியுள்ளார் என சினிமா வட்டாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக விஷயங்கள் கசியத் தொடங்கியுள்ளன. நடிகை ரொம்பவே நம்பிக்கையானவர் என நம்பி அவரை காதலிக்கத் தொடங்கினார். ஆனால், இவரும் நடிகையை பயன்படுத்தி பிரபல நடிகராக வளர்ந்துவிட்ட நிலையில், தற்போது நடிகையின் தயவு தனக்கு தேவையில்லை என்பதால் இன்னொரு இளம் நடிகையுடன் காதல் கொண்டுள்ளார் என்கின்றனர்.
ஆன்ட்டி ஆகிட்டாரு: தனது காதலி ஆன்ட்டியாக இருக்கக் கூடாது என நடிகர் நினைத்த நிலையில், மில்க் பியூட்டி தானே தன்னை ஆன்ட்டி என ஒத்துக் கொண்ட நிலையில், நடிகரின் நண்பர்கள் கிண்டலடிக்க ஆரம்பித்த நிலையில் தான் வேறு ஒரு இளம் நடிகையை தேடி போய்விட்டார் அந்த வெற்றி நடிகர் எனக் கூறுகின்றனர்.
ஹோலி கொண்டாட்டத்தில்: காதல் தோல்வியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நடிகையை ஹோலி கொண்டாட்டத்திற்கு அழைத்து வந்து பேட்ச் அப் வேலையை செய்ய அந்த பிரபல நடிகை நினைத்த நிலையில், நிகழ்ச்சிக்கு வந்த மில்க் பியூட்டி தான் ரொம்ப ஹேப்பியாக இருப்பது போல காட்டிக்கொள்ள காதலரை கண்டமேனிக்கு கடுப்பேற்றும் வகையில் ஆட்டம் போட்டிருக்கிறார். ஆனால், கடைசியில் கதறி அழுதது அந்த நடிகை தான் என்கின்றனர்.
நடிகையுடன் ஜாலி: ஹோலி கொண்டாட்டத்தில் தனது புதிய காதலியான இளம் நடிகையை வரவழைத்து நடிகர் பண்ண ஜாலி மில்க் பியூட்டி நடிகையை கதறி அழுத வைத்துவிட்டது என்றும் அந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் சீக்கிரமே வெளியேறவும் அந்த யங் ஹீரோயினின் வருகை தான் காரணம் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.