ARTICLE AD BOX
முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா காா்ஸ் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 21 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த பிப்ரவரி மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 10,323-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 21 சதவீதம் குறைவாகும். அப்போது நிறுவனம் 13,078 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 5,616-ஆகவும் ஏற்றுமதி 4,707-ஆகவும் சரிந்துள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கைகள் முறையே 7,142-ஆகவும் 5,936-ஆகவும் இருந்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.