ARTICLE AD BOX
உணவு முறை மாற்றம் தற்போது அதிகரித்து வருகிறது. முன்னர் வீட்டு உணவுகளையே அதிகமாக சாப்பிடும் பழக்கம் நம்மிடம் இருந்தது. வேலைக்கு செல்பவர்கள் கூட வீட்டில் சமைத்த உணவுகளை கையோடு கொண்டு சென்றனர்.
ஆனால், தற்போது பலரும் உணவகங்களில் இருந்து வாங்கி சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர். பணியின் நிமித்தமாகவும் சரி அல்லது நண்பர்களுடன் அடிக்கடி வெளியே செல்வதாக இருந்தாலும் சரி, உணவகங்களுக்கு செல்லும் பழக்கம் இன்றைய சூழலில் அதிகரித்து இருக்கிறது. மேலும், வெளியூரில் தங்கி இருப்பவர்கள் வீட்டில் சமைத்து சாப்பிடுவது சிரமமாக இருக்கும்.
இப்படி அடிக்கடி உணவகங்களில் சாப்பிடுவதால் வயிற்றில் அல்சர் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனை எவ்வாறு குணப்படுத்தலாம் என்று மருத்துவர் ஷர்மிகா குறிப்பிட்டுள்ளார். இதற்காக சில பழங்களை சாப்பிடலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
உதாரணமாக மதிய உணவை வெளியே சென்று சாப்பிட்டால், அடுத்த வேளை உணவாக மாதுளம் பழம் அல்லது கொய்யாப் பழம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். ஏனெனில், இவற்றில் வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் தன்மை இருக்கிறது.
எனவே, ஒவ்வொரு முறை உணவகத்தில் சாப்பிடும் போதும் அதில் இருந்து ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்காக மாதுளம் பழம் மற்றும் கொய்யாப் பழம் ஆகியவற்றை சரியான அளவில் எடுத்துக் கொள்ளலாம்.
நன்றி - DAISY HOSPITAL Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.