ஹெல்தியான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்... அவல் மட்டும் போதும்

3 hours ago
ARTICLE AD BOX

அவல் வைத்து ஈஸியான ஹெல்தியான லட்டு எப்படி செய்வது என்று பார்ப்போம். என்ன ஸ்நாக்ஸ் செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஈஸியான அவல் லட்டு செய்துகொடுங்கள். 3 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். சுவையாக இருக்கும். 

Advertisment

ஈஸியான அவல் லட்டு செய்வது பற்றி ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பதாவது, 
 
தேவையான பொருட்கள்

வேர்க்கடலை 
பொட்டு  கடலை 
அவல்  
நெய்  
முந்திரி  
திராட்சை 
வெல்லம் 
துருவிய தேங்காய் 
ஏலக்காய் தூள்  

செய்முறை

Advertisment
Advertisement

முதலில் கடாயில் நிலக்கடலையை போட்டு இரண்டு நிமிடம் வறுத்து, பொட்டு  கடலை சேர்த்து கலந்து விடவும். பின்னர் அவல் சேர்த்து இரண்டு நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்.

இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து ஒரு தட்டில் எடுத்து போடவும். பிறகு அதே கடாயில் சிறிது நெய், முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.

அவல் லட்டு | Aval Ladoo Recipe In Tamil | Diwali Sweet Recipes | Ladoo Recipes |

வெல்ல பாகு செய்ய, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து வெல்லம் உருகியதும் அடுப்பை அணைத்து தனியாக வைக்கவும். வறுத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.

பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தில் வெல்ல பாகு, துருவிய தேங்காய், வேர்க்கடலை அவல் தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். கலவையை நன்கு கலந்து, வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் இரண்டு மேசைக்கரண்டி நெய் சேர்க்கவும்.

பிறகு அடுப்பை அணைத்து விட்டு  கலவையை ஒரு தட்டில் வைத்து முழுமையாக ஆற வைக்கவும். இவை ஆறிய பிறகு அதில் சிறிது எடுத்து லட்டுவாக பிடிக்கவும். அவ்வளவு தான் சுவையான அவல் லட்டு தயார்.

Read Entire Article