ஹிட்லரை விட மோசமானது பாஜக அரசு நடத்தும் ஆட்சி… ஆ.ராசா காட்டம்…!!!

2 days ago
ARTICLE AD BOX

சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீடு விழாவில் பங்கேற்று பேசிய ஆ.ராசா, மொழியால் நாட்டை துண்டாட பார்க்கிறார்கள் என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறார். உயிரோடு கலந்துள்ள நம்முடைய தமிழ் மொழி உணர்வை பார்த்து மொழி அரசியல் செய்கிறார்கள் என்கின்றார். ஆனால் சுய லாபத்திற்காக நீங்கள் மட்டும் மத அரசியல் செய்யலாமா? பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் என்ன வித்தியாசம் உள்ளது தெரியுமா? இந்தி மொழி விவகாரத்தில் இவர்கள் இருவரின் கொள்கை என்ன? மொழிதான் நாட்டை பிரித்தது. நாங்கள் பிரிவினை கேட்கவில்லை, நீங்கள்தான் கேட்க வைக்கிறீர்கள்.

பிரதமர் மோடி நீங்கள் இன்னும் பேசினால் கோ பேக் மோடி என்று சொல்ல மாட்டோம் விரைவில் நாடாளுமன்றத்தில் ஷட் அப் மோடி என்றுதான் நாங்கள் சொல்வோம். சமூகத்திற்காக உழைத்தவர்களில் பெரியாருக்கு முன் யாரும் இல்லையா? அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் இந்தி திணிப்பில் ஆர்வம் காட்டவில்லை. பெரியார் தனி தமிழ்நாடு கேட்டு போராடியதற்கு காரணமே ஜாதி ஒழிந்த தனி தமிழ்நாடு வேண்டும் என்பதற்காகத்தான். ஜாதி மதம் இல்லாமல் ஒரு மனிதன் வாழலாம், வாழ வேண்டும். ஆனால் மொழி இல்லாமல் மனிதனால் ஒருபோதும் வாழ முடியாது. அப்படி வாழ்ந்தால் அவன் மனிதனே இல்ல. ஹிட்லரை விட ஒரு மோசமான ஆட்சி நடத்துகின்ற பாசிச அரசை நாம் பெற்றுள்ளோம் என்று பாஜகவை ஆ.ராசா விமர்சித்துள்ளார்.

Read Entire Article