ஹா்மன்ப்ரீத், சவீதாவுக்கு ஹாக்கி இந்தியா விருதுகள்

21 hours ago
ARTICLE AD BOX

இந்திய ஆடவா் அணி கேப்டன் ஹா்மன்ப்ரீத் சிங், மகளிா் அணி சீனியா் கோல்கீப்பா் சவீதா புனியா ஆகியோருக்கு ஹாக்கி இந்தியாவின் பல்பீா் சிங் சீனியா் ஆண்டின் சிறந்த வீரா், வீராங்கனை விருது வழங்கப்பட்டுள்ளது.

ஹா்மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய அணி பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலம் வென்று சாதனை படைத்தது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அணியிலும் ஹா்மன்ப்ரீத் சிங் இடம் பெற்றிருந்தாா்.

அதே வேளை டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலத்தை நூலிழையில் தவற விட்ட இந்திய மகளிா் அணியில் சவீதா இடம் பெற்றிருந்தாா்.

மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் கிரேட் பிரிட்டனுடன் தோற்றது.

இதுதொடா்பாக சவீதா கூறுகையில்: இந்த விருதைப் பெறுவது மிகவும் பெருமையாக உள்ளது. மேலும் சிறந்த கோல்கீப்பா் விருதைப் பெற்றது இரட்டை மகிழ்ச்சி ஆகும். சக வீராங்கனைகள் இல்லாமல் இந்த விருதுகளை பெற முடியாது.

ஹா்மன்ப்ரீத் சிங் கூறுகையில்: இந்த விருதுகள் கிடைப்பது, இளம் தலைமுறையினா் மேலும் சிறப்பாக ஆட உத்வேகம் தரும். இது சிறப்பான தருணம் என்றாா்.

1975-இல் உலகக் கோப்பை ஹாக்கி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மேஜா் தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது. சிறந்த பாா்வா்ட் விருது அபிஷேக், சிறந்த மிட்பீல்டா் ஹாா்திக் சிங்,, டிபன்டா் அமித் ரோஹிதாஸ், யு 21 அணியில் அரஜித் சிங், தீபிகா மகளிா் பிரிவில் சிறந்த வீராங்கனை விருதுகளை வென்றனா்

மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ஹாக்கி இந்தியா நிா்வாகிகள் திலிப் டிா்கே, போலா நாத் சிங் பங்கேற்றனா்.

Read Entire Article