ARTICLE AD BOX
பிரியாணி, சப்பாத்தி என பல வகையான உணவுகள் இருந்தாலும் பலருக்கு விருப்பமாக இருப்பது தயிர் சாதம். அதிலும், மதிய நேரத்தில் உணவு முழுவதையும் சாப்பிட்ட பின்னர், சிறிது சாதத்தில் தயிர் ஊற்றி உண்பதற்கு நிறைய பேர் விரும்புவார்கள்.
எனினும், இரவில் தயிருக்கு உறை ஊற்றி வைக்க மறந்து விட்டால் காலை நேரத்தில் டென்ஷன் ஏற்படும். இதனை சமாளிப்பதற்கு உறை ஊற்றாமல் எவ்வாறு சிம்பிளாக தயிரை தயார் செய்யலாம் என்று இப்போது பார்ப்போம்.
ஒரு சிறிய டிஃபன் பாக்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த டிஃபன் பாக்ஸின் உட்புறம் முழுவதும் ஒரு ஸ்பூன் தயிர் கொண்டு நன்றாக தடவ வேண்டும். இதன் பின்னர், வெதுவெதுப்பான பாலை, இந்த டிஃபன் பாக்ஸில் ஊற்றிக் கொள்ளலாம்.
இந்த டிஃபன் பாக்ஸை ஒரு காலியான ஹாட்பாக்ஸில் வைக்க வேண்டும். அத்துடன் பாலின் நடுப்பகுதியில் ஒரு கிளாஸ் வைத்து, அதில் சுடுதண்ணீர் ஊற்ற வேண்டும். இதையடுத்து, ஹாட்பாக்ஸை மூடி விடலாம்.
இப்படி செய்தால் சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் தயிர் தயாராகி விடும். இதற்காக இரவே உறை ஊற்றி வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும், இரவில் உறை ஊற்றி வைக்க மறந்து விட்டால் டென்ஷன் இல்லாமல் காலையில் தயிரை தயாரித்துக் கொள்ளலாம்.
நன்றி - Nalini Manick Cooking Youtube Channel