ஸ்ருதி அம்மாவின் திமிர் பேச்சு… சிம்பிளாக மூக்கை உடைத்த முத்து.. செமையா இருக்கே!

15 hours ago
ARTICLE AD BOX

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

வித்யா மற்றும் முருகன் இருவரும் கோவிலுக்கு வந்து தங்களுக்கு பிடித்தது மற்றும் பிடிக்காதது குறித்து எழுதி மாற்றிக் கொள்கின்றனர். சின்ன சின்ன விஷயங்கள் முரண்பாடாக இருந்தாலும் அதை மாற்றிக் கொள்வதாக முருகன் கூறிவிடுகிறார்.

உங்களுக்கு ஓகேவா என வித்யாவிடம் கேட்க அவர் நீங்களே விட்டுக் கொடுத்துப் போகும் போது நானும் என்னை மாற்றிக் கொள்கிறேன் என்கிறார். அடுத்து என்ன என முருகன் கேட்க கேட்டு சொல்றேன் என்கிறார் வித்யா. யாரிடம் எனக் கேட்க தன் மனசாட்சியிடம் எனக் கூறிவிட்டு மீனாவிற்கு ஃபோன் செய்ய செல்கிறார். 

மீனாவிற்கு கால் செய்த நீங்க சொன்னது போல எழுதி மாத்திக்கிட்டோம். சில விஷயங்கள் செட்டாகலை. ஆனா அவர் மாற்றிக் கொள்வதாக சொல்கிறார். லவ்வை சொல்லிடவா என மீனா கேட்க அவசரப்படாதீங்க. அவர் சொல்லட்டும் என்கிறார்.

வீட்டில் ஸ்ருதியின் அம்மா வந்து அவர் ரெஸ்டாரெண்ட்டில் வேலைக்கு போவது குறித்து சத்தம் போடுகிறார். டப்பிங்கிற்கே அவ ஆசைக்காக தான் அனுப்பினோம். இந்தாங்க செக் எவ்வளவு வேணாலும் ஃபில் பண்ணிக்கோங்க என்கிறார்.

உடனே முத்து வாங்கி 500 தொடங்கி 500 கோடி வரை எழுத ஸ்ருதியின் அம்மா பதறிவிடுகிறார். நான் போய் பணம் எடுத்துக்கிட்டு வரேன் எனக் கிளம்ப போக அவரை நிறுத்துகிறார் ஸ்ருதி அம்மா. தெரியுதா, உங்கள் பணத்தில் நாங்க வாழ அவசியமில்லை.

செக்கையும் கிழித்துவிடுகிறார். அண்ணாமலை நாங்க எங்க மூணு மருமகளிடமும் சம்பாரித்து தரச் சொல்லியது இல்லை. என் மகன்கள் வீட்டு செலவுக்கு காசு கொடுத்து இருக்கின்றனர். அவ்வளவுதான் என்கிறார். உடனே விஜயாவிடம் நீங்களாவது சொல்லக்கூடாதா என்கிறார் ஸ்ருதியின் அம்மா.

உங்க பொண்ணு என் பேச்சை எங்கே கேட்கிறா எனக் கூற ரவிக்கு ஒரு ரெஸ்டாரெண்ட் வைத்து தருவதாக சொன்னவுடன் பேசி பார்ப்பதாக சொல்கிறார். மறுபுறம் வித்யா மற்றும் முருகன் இருக்கும் அதே கோவிலுக்கு அருண் மற்றும் சீதா சாமி கும்பிட வருகின்றனர்.

Read Entire Article