ARTICLE AD BOX
ஐதராபாத்: பெங்களூர் பட விழாவை புறக்கணித்த ராஷ்மிகாவுக்கு கர்நாடக மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ரவிக்குமார் கவுடா கனிகா கூறியதற்கு ராஷ்மிகா பதிலளித்துள்ளார். பெங்களூரில் ஆண்டுதோறும் சர்வதே திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நடிகை ராஷ்மிகாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம். அப்போது, ராஷ்மிகா, கர்நாடகாவா? அது எங்கு இருக்கிறது? என கேட்டதாகவும் விழாவில் பங்கேற்க முடியாது என்று சொன்னதாகவும் தகவல் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ரவிக்குமார் கவுடா கூறும்போது, ‘கர்நாடகாவை மதிக்க தெரியாத ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார். இதற்கு ராஷ்மிகா தரப்பில் கூறுகையில், ‘பெங்களூர் திரைப்பட விழாவுக்கு வர மறுத்ததாக கூறுவது உண்மையல்ல. அதுபோல் யாரிடமும் ராஷ்மிகா சொல்லவில்லை. கர்நாடகத்தையோ கர்நாடக மக்களையோ அவர் தரக்குறைவாக ஒரு போதும் பேசியது கிடையாது. முறையான அழைப்பு வந்திருந்தால் ராஷ்மிகா கலந்துகொண்டிருப்பார்’ என்றனர்.