ARTICLE AD BOX
நயன்தாராவிற்கு வந்த திடீர் ஞானோதயம்.. தனுசை கடுப்பேத்த செய்த வேலை.. பிரபலம் சொன்ன தகவல்!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நடிகை நயன்தாராவை ரசிகர்கள் அனைவரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைத்து வருகின்றனர். நேற்று திடீரென அறிக்கை வெளியிட்ட நயன்தாரா, தன்னை யாரும் இனிமேல் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்க கூடாது என அதிரடியாக அறிவித்து இருந்து இருந்தார். இதுகுறித்து பேட்டி அளித்த அந்தணன், அவரை யார் சூப்பர் ஸ்டார் என கூப்பிடுகிறார்கள் என எனக்கு தெரியவில்லை என பேசி உள்ளார்.
வலைப்பேச்சு அந்தணன் அளித்த பேட்டியில், நயன்தாராவின் இந்த திடீர் அறிவிப்புக்கு என்ன காரணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்றால், தனுஷும் அஜித்தும் சேர்ந்து ஒரு படத்தில் சேர இருப்பதாகஅ வலைத்தளத்தில் நாங்கள் அறிவித்து இருந்தோம். இந்த செய்தி இணையத்தில் வைரலானது. இதனால் தனஷ் பற்றி செய்திகள் இணையத்தில் பரவின. அந்த செய்தியை டைவர்ட் பண்ண வேண்டும் என்பதற்காகவே நயன்தாரா இப்படி ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கலாம். அதில் நயன்தாராவிற்கு ஒரு அற்ப சந்தோஷம்.

யார் அழைக்கிறார்: நயன்தாராவை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று எங்கேயுமே அழைத்ததே இல்லை. நயன்தாரா நிறைய பொது நிகழ்ச்சிகளுக்கு செல்கிறார்கள் அங்கு மக்கள் அனைவரும் அவரை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். அவருக்கு பேனர் வைக்கிறார்கள் என்றால் என்னை இனிமேல் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என்று சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால், அப்படி நயன்தாரா எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும கலந்து கொண்டது இல்லை. இதனால் இப்போ இதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
நயன்தாராவிற்கு வந்த திடீர் ஞானோதயம்: அஜித்தும் தனுஷும் இணைய போகிறார்கள் என்ற செய்தி, மிகப்பெரிய செய்தி இந்த செய்தியை தொடர்ந்து ஒரு வாரமாக இணையத்தில் தனுஷ் பேசும் பொருளாகி வந்ததால், அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் கடுப்பான நயன்தாரா, இந்த செய்தியை வெளியிட்டு இருக்கலாம். அதுவும் அவசர அவசரமாக இரவு 7 மணிக்கு வெளியிட வேண்டிய அவசியம் இல்லை, காலையில் பொறுமையாகவே வெளியிட்டு இருக்கலாமே. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில், நயன்தாரா தனது பெயரை லேடி சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டு இருந்தார். அதேபோல ப்ரமோஷனலில் எப்படி கலந்து கொள்ள மாட்டேன் கையெழுத்து போடுவாரோ, அதேபோல லேடி சூப்பர் ஸ்டார் என்ற டைட்டிலை போட வேண்டும் என கையெழுத்து போடுவார். அப்படி இருந்த நயன்தாராவிற்கு திடீரென இந்த போதிமரத்தில் இருந்து ஞானோதயம் வந்தது என்று தெரியவில்லை.
அவர் தான் சொல்லவேண்டும்: அதுமட்டுமல்லாமல் அஜித் அவர்கள் தலை என அழைக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்டிருந்தார் அதேபோல சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் என அனைவரும் தங்களது பட்டப்பெயரை போட்டுக் கொள்வதில்லை. இதனால் நயன்தாராவும் இந்த முடிவை எழுதி இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. அது என்ன காரணம் என்பது நயன்தாரா தான் சொல்ல வேண்டும் என வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தனுஷ், அஜித்திடம் போனில் பேசிய கதையின் ஒன் லைனை சொல்லி இருக்கிறார். அதைக்கேட்ட கதை பிடித்து இருப்பதாக சொல்லி இருக்கிறார். முழுகதையையும் அடுத்த மாதம் சென்னை வரும் அஜித், கதையை கேட்க இருப்பதாக அவர் அந்த பேட்டியில் பேசி உள்ளார்