நயன்தாரா மட்டுமில்ல!.. விஜயும் ஒரு மாசம் விரதம்!... ஆனா இது வேற மாறி!...

3 hours ago
ARTICLE AD BOX

Mookuthi amman 2 : தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் இவர்தான். ஆனால், கடந்த சில வருடங்களாக இவரின் நடிப்பில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே, சினிமாவில் சம்பாதித்த பணத்தில் வேறு சில தொழில்களிலும் அவர் முதலீடு செய்து வருகிறார்.

மேலும், இரண்டு மகன்கள் இருப்பதால் அவர்களை கவனித்துக்கொள்ளவே நேரமும் சரியாக இருக்கிறது. அதேநேரம், சென்னையில் மட்டும்தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும். நான் இவ்வளவு நேரம் மட்டும் நடிப்பேன்.. இத்தனை மணிக்கு என்னை விட்டுவிட வேண்டும் என பல கண்டிஷன்களை போட்டபின்னரே நடிக்க ஒப்புக்கொள்கிறார்.

இந்நிலையில்தான், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார். நாளை இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருந்தார். அது ஹிட் அடிக்கவே இப்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.


இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது. இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பொதுவாக தான் நடிக்கும் படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு போகாத நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 பூஜையில் கலந்துகொண்டார். இந்த படத்தில் ரெஜினா கெசந்த்ரா, அபிநாயா உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்கவுள்ளது. எற்கனவே அரண்மனை முதல் அரண்மனை 4 வரை சுந்தர்.சி இயக்கிய எல்லா படமுமே ஹிட். அதோடு, அவர் 12 வருடங்களுக்கு முன்பு இயக்கி வெளியான மத கஜ ராஜாவும் பொங்கலுக்கு வெளியாகி ஹிட் அடித்தது. எனவே, மூக்குத்தி அம்மன் 2-வும் ஹிட் அடிக்கும் என்றே கணிக்கப்படுகிறது.

இந்த படத்திற்காக நயன்தாரா விரதம் இருந்து வருகிறாராம். அவரோடு சேர்த்து அவரின் மகன்களும் விரதம் இருப்பதாக தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். ஒருபக்கம், தவெக தலைவரும் நடிகருமான விஜய் ரமலான் நோன்பு இருந்து வருகிறார். இஸ்லாமிய பெருமக்களுடன் இணைந்து விஜய் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நாளை அவர் பங்கேற்கவுள்ளார்.

Read Entire Article