ஸ்டுடண்டாக மிரட்டும் சிம்பு…. வெறித்தனமான ‘STR 49’ பட அறிவிப்பு!

3 hours ago
ARTICLE AD BOX

STR 49 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஸ்டுடண்டாக மிரட்டும் சிம்பு.... வெறித்தனமான 'STR 49' பட அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சிம்பு. இவர்கள் நடிப்பில் கடைசியாக பத்து தல திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து இவர், கமல், மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் 2025 ஜூன் 5-ம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதேசமயம் நடிகர் சிம்பு தேசிங்கு பெரியசாமி, அஸ்வத் மாரிமுத்து ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார். இந்நிலையில் சிம்புவின் 41வது பிறந்த நாளான இன்று (பிப்ரவரி 3) அவருடைய 49வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தற்காலிகமாக STR 49 என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை பார்க்கிங் படத்தில் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாகவும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்டுடண்டாக மிரட்டும் சிம்பு.... வெறித்தனமான 'STR 49' பட அறிவிப்பு!மேலும் இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரில் நடிகர் சிம்பு கையில் புத்தகத்துடனும் அந்த புத்தகத்தில் ரத்தக் கறையுடன் உள்ள கத்தியும் காட்டப்பட்டுள்ளன. எனவே இந்த போஸ்டரின் மூலம் நடிகர் சிம்பு இந்த படத்தில் இன்ஜினியரிங் காலேஜ் ஸ்டூடன்ட்டாக நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. வெறித்தனமான இந்த போஸ்டர் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இனிவரும் நாட்களில் படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

Read Entire Article