‘ஸ்டார்’ பட இயக்குனருடன் கைகோர்க்கும் ஆகாஷ் முரளி!

3 hours ago
ARTICLE AD BOX

நடிகர் ஆகாஷ் முரளி ஸ்டார் பட இயக்குனருடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.'ஸ்டார்' பட இயக்குனருடன் கைகோர்க்கும் ஆகாஷ் முரளி!

மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி தனது மாமனார் சேவியர் பிரிட்டோவின் தயாரிப்பில் ‘நேசிப்பாயா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை அஜித்தின் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களின் மூலம் பிரபலமான விஷ்ணுவரதன் இயக்கியிருந்தார். இதில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருந்தார். 'ஸ்டார்' பட இயக்குனருடன் கைகோர்க்கும் ஆகாஷ் முரளி!ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் கடந்த பொங்கல் தினத்தன்று திரைக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதைத்தொடர்ந்து ஆகாஷ் முரளி, இயக்குனர் இளன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் என புதிய தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது இயக்குனர் இளன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல், கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். 'ஸ்டார்' பட இயக்குனருடன் கைகோர்க்கும் ஆகாஷ் முரளி!இவருடைய அடுத்த படத்தில் ஆகாஷ் முரளி நடிக்க உள்ளார் எனும் தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படத்தினை ஆகாஷ் முரளியின் மாமனார் சேவியர் பிரிட்டோ தயாரிக்கப் போகிறார் எனவும் சொல்லப்படுகிறது. எனவே இனிவரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இந்த படத்தில் யார் யார் நடிக்க போகிறார் என்ற தகவலும் வெளியாகும் என நம்பப்படுகிறது.

Read Entire Article