“ஸ்கூலுக்கு போக பிடிக்கவில்லை” மாணவி போட்ட பிளானை கேட்டு விழிபிதுங்கிய காவல் துறை…

3 days ago
ARTICLE AD BOX

பொதுவாக 90s கிட்ஸ் பள்ளிக்கு போகாமல் வீட்டில் இருக்க வேண்டும் என்றால், உடனே வயிறு வலி, காய்ச்சல், தலைவலி என்று போய் சொல்வது உண்டு. ஆனால், நீலகிரியில் 2k கிட்ஸ் ஸ்கூலுக்கு லீவ் போட சொன்ன காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆம், நீலகிரியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், தனது காதல் விவகாரத்தை மறைக்கவும், பள்ளிக்கு செல்வதைத் தவிர்க்கவும் சொன்ன அந்த காரணம் காவல் துறையையே விழிபிதுங்க வைத்துள்ளது. அந்த மாணவி கூறும் போது, பள்ளி முடித்து தான் வீடு திரும்பியதாகவும், அப்போது, மர்ம நபர்கள் 2 பேர் மயக்க மருந்து தெளித்த கைக்குட்டையால் தனது முகத்தை மூடியதாகவும் கூறியுள்ளார்.

அது மட்டும் இல்லாமல், மயக்க நிலையில் இருந்த தன்னை வனப்பகுதியில் வைத்து 2 பேரும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மயக்கம் தெளிந்தபோது தலையில் பாட்டிலால் அடித்து மீண்டும் மயக்கமடைய வைத்ததாகவும் பெரிய கதையை கூறியுள்ளளார். மேலும், அவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாணவியின் புகாரை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், விசாரணையை துரிதப்படுத்தினர்.

ஆனால் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், மாணவிக்கு நடந்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் கூறிய அனைத்தும் பொய் என்பது தெரியவந்துள்ளது. இதனால் மேலும், அதிர்ச்சி அடைந்த போலீசார், மாணவியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, தனது காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்துவிட்டதாகவும், அதனை திசைதிருப்ப இப்படி நாடகம் ஆடியதாகவும் மாணவி கூறியுள்ளார்.

மேலும், அவர் கூறும் போது தனக்கு பள்ளி செல்ல விருப்பம் இல்லாததால் இப்படி பொய் கூறி வீட்டிலேயே இருந்துவிடலாம் என நினைத்ததாகவும் மாணவி கூறியுள்ளார். இதனைககேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், மாணவியை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Read more: பனியன் நிறுவன மேலாளர் படுகொலை..!! குளத்தில் மிதந்த உடல் பாகங்கள்..!! ஷாக்கான காவல்துறை..!! விசாரணையில் அதிர்ச்சி..!!

The post “ஸ்கூலுக்கு போக பிடிக்கவில்லை” மாணவி போட்ட பிளானை கேட்டு விழிபிதுங்கிய காவல் துறை… appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article