ARTICLE AD BOX
Carnegie Endowment Delimitation Estimates: 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தமிழ்நாடு, கேரளாவுக்கு தலா 8 தொகுதிகள் வரை இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மாநில உரிமைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் கட்சிகள் கவலை தெரிவிக்கின்றன.

மாநிலங்களுக்கான தற்போதைய மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு 1971ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது. இது 2026ஆம் ஆண்டின் உத்தேச மக்கள்தொகை அடிப்படையில் திருத்தப்பட்டால், சில மாநிலங்கள் அதிக தொகுதிகளைப் பெறக்கூடும், மற்றவை பல தொகுதிகளை இழக்கக்கூடும் என கேமிகி எண்டோமென்ட் மதிப்பீடுகள் காட்டுகின்றன.

கேமிகி எண்டோமென்ட் மதிப்பீட்டின் அடிப்படையில் அதிகபட்சமாக தமிழ்நாடு, கேரளா இரு மாநிலங்களுக்கும் தலா 8 தொகுதிகள் இழப்பு ஏற்படும். ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்திற்கும் (தெலுங்கானா, ஆந்திரா) மொத்தம் 8 தொகுதிகள் இழப்பு வரும்.

மேற்கு வங்கம் (4), ஒடிசா (3), கர்நாடகா (2), இமாச்சலப் பிரதேசம் (1), பஞ்சாப் (1), உத்தராகண்ட் ஆகியவையும் தங்கள் மக்களவைத் தொகுதி எண்ணிக்கையில் இழப்பைச் சந்திக்கும் என கேமிகி எண்டோமென்ட் மதிப்பீடு கூறுகிறது. அசாம் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.

ஆனால், இந்தி பேசுபவர்கள் அதிகம் வசிக்கும் நான்கு மாநிலங்கள் கூடுதலாக பல மக்களைத் தொகுதிகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது. உத்தரப் பிரதேசம் 11, பீகார் 10, ராஜஸ்தான் 6, மத்தியப் பிரதேசம் 4 தொகுதிகளைக் கூடுதலாக பெறக்கூடும். இதுமட்டுமின்றி, மேலும் 5 வட மாநிலங்களுங்களும் இதன் மூலம் பயன் அடையும்.

சட்டிஸ்கர், டெல்லி, குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய ஐந்து வட மாநிலங்ககளுக்கான மக்களவைப் பிரதிநிதித்துவம் தலா தொகுதி அதிகரிக்கும். இந்த மாநிலங்களும் இந்தி பேசும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைக் கட்டுப்பாடுத் திட்டத்தை முறையாக அமல்படுத்தி மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய காரணத்தினால் தென்மாநிலங்களில் மக்கள்தொகை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. இந்நிலையில், மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்யும்போது தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநில்ங்களுக்கான மக்களவை பிரதிநிதித்துவம் குறையும் என்று கவலை எழுந்துள்ளது.

மக்களவை பிரதிநிதித்துவம் குறையும்போது மாநிலங்களுக்கான உரிமைகளைப் பெறுவதில் பிரச்சினைகள் ஏற்படும், பல விவகாரங்களில் மத்திய அரசிடம் மாநில உரிமைகளை பறிகொடுக்க நேரிடும் என்று திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் கூறுகின்றனர். எனவே, மாற்று வழிமுறையைக் கண்டுபிடித்து, தென்மாநிலங்கள் வஞ்சிக்கப்படாத வகையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.