ARTICLE AD BOX
மும்பை: பாலிவுட்டின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஊர்வசி ரவுட்டேலா. தமிழில் ‘த லெஜன்ட்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் வந்த ‘டாகு மகாராஜ்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இதில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டமும் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து ஆடினார். ஊர்வசி நேற்று முன்தினம் அவருடைய 32வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அதற்காக வைரத்தால் ஆன ஆடையை அணிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீளமான கவுன் ஒன்றில் வைரங்களும், கண்ணாடிகளும் பதிக்கப்பட்டதாக அந்த ஆடை உள்ளது. இது பல லட்சம் மதிப்புள்ளது என்றும் கூறியிருக்கிறார். “நீங்கள் அனைவரும் என்னுடன் இருந்து பரிசுகள், வாழ்த்துகளைத் தந்ததற்கும், அன்பைப் பொழிந்ததற்கும் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது, என் மனதில் இருந்து நன்றி,” என நன்றி தெரிவித்துள்ளார். இதற்கு முன் கடந்த பிறந்த நாளில் தங்க கேக்கை வெட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் ஊர்வசி ரவுட்டேலா.