ARTICLE AD BOX

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
கறிக்கடைக்காரர் மற்றும் ரோகிணி இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது முத்து மற்றும் அண்ணாமலை வர அவர்களை பார்த்து ஹெல்மெட்டை போட்டு விடுகிறார். கறிக்கடைக்காரர் கிளம்ப பார்க்க முத்து அவரை அழைக்கிறார். ஃபோனை மறந்து வைத்துவிட்டதாக எடுத்துக் கொடுக்கிறார்.
அதை வாங்கிக்கொண்டு அவர் சென்றுவிட என்ன ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம போறாரு என்கிறார் முத்து. ரோகிணி என்ன விஷயம் என கேட்க அப்பா எப்ப வேணாலும் வருவார் அவர் தான் இந்த கடை ஓனர் என்கிறார் முத்து.

ரோகிணி முத்துவை முறைத்து விட்டு என்ன விஷயம் அங்கிள் என கேட்க பரசுவின் மகள் திருமணத்திற்கு ஏதேனும் பொருள் வாங்க வேண்டும் எனக் கூறி வந்திருப்பதாக கூறுகிறார். ரோகிணி பொருளை காட்டிக் கொண்டிருக்கிறார். மனோஜ் ரோட்டில் கதிரை பார்க்கிறார்.
அவரை துரத்திக் கொண்டு செல்ல அவர் துரிதமாக செயல்பட்டு காரில் ஏறி தப்பி விடுகிறார். ஆனால் மனோஜ் அவரை துரத்திக் கொண்டு வரும்போது மற்றவர்களை இடித்துவிட்டு காரில் கல்லை எறிவதற்கு பதில் கான்ஸ்டபிள் மேல் போட்டு விடுகிறார்.
பின்னர் அவர்கள் எல்லாம் துரத்தி வருவதற்கு பயந்து மனோஜ் ஓட பார்க்க அவருக்கு விபத்து நடந்து விடுகிறது. அந்த நேரத்தில் சரியாக விஜயா விழுந்து மனோஜ் என கத்துகிறார். இதை பார்த்து முத்து ஓடி வந்து அவரை தூக்க பார்க்க விஜயா மறுத்துவிடுகிறார்.
மீனாவும் வந்து உதவி செய்ய பார்க்க அவரையும் மறுத்துவிடுகிறார். அப்போது ரவி வர அவரிடம் தூக்க சொல்ல விழுந்துவிட்டதாக கூறுகிறார். ரவி அவரை அழைத்துக் கொண்டு போய் சோபாவில் உட்கார வைத்து காலை அமுக்கிவிட்டு கொண்டிருக்கிறார்.
அவரிடம் நன்றாக பேசுவதை பார்த்த முத்து வருத்தப்படுகிறார் அவருக்கு மீனா ஆறுதல் கூறுகிறார். அந்த நேரத்தில் ரோகிணி கால் செய்து மனோஜிற்கு விபத்து நடந்த விஷயத்தை கூற விஜயா அழுது கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அண்ணாமலை வந்துவிட அவரும் இதைக் கேட்டு அழுகிறார்.
எல்லோரும் மருத்துவமனை செல்ல அங்கு மனோஜிற்கு பெரிய கட்டு போட்டு இருப்பதாக கூறுகின்றனர். ரோகிணி கண்ணில் ஏன் இந்த கட்டு எனக் கேட்க அவருக்கு கண்ணாடி குத்தி இருக்கு என்கின்றனர். ஆபத்து இல்லதானே எனக் கேட்க டெஸ்ட் எடுக்கணும் எனக் கூறி விடுகின்றனர். ஸ்ருதி, மீனா ரோகிணிக்கு ஆறுதல் சொல்கின்றனர்.