ARTICLE AD BOX
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் ‘பெருசு’. திரையரங்குகளில் மார்ச் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், "'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்குப் பிறகு இன்னும் பெரிதாக என்ன செய்யலாம் என்று நாங்கள் காத்திருந்தபோது வந்த படம் தான் 'பெருசு'. இளங்கோவுக்கு அதற்கு நன்றி. ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் 16ஆவது படம் இது. அடல்ட் ஃபிலிம் என்றாலே சில விஷயங்களை டார்கெட் பண்ணி தான் இந்தியாவில் படங்கள் இருக்கும்.
மேலும் படிங்க: அஜித்தின் 'குட் பேட் அக்லி'.. புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!
ஆனால், மேற்கத்திய நாடுகளில் இதை இந்த சுவாரசியமாகவும் முகம் சுழிக்காத விதமாகவும் எடுப்பார்கள். இந்த விஷயங்களை 'பெருசு' படத்தில் உடைத்து சிறப்பாக கொண்டு வந்திருக்கிறோம். அடல்ட் என்ற விஷயத்திற்கு புது கோணம் கொடுத்திருக்கிறோம். இதை சாத்தியப்படுத்தி கொடுத்த இளங்கோவுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி. எங்களுடன் இணைந்து பவேஜா ஸ்டுடியோஸூம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். உங்கள் ஆதரவு தேவை".
விநியோகஸ்தகர் சக்திவேலன், “இந்த வருடம் ‘பெருசு’ படத்துடன் ஸ்டோன் பெஞ்ச்சுக்கு பாசிட்டிவாக தொடங்கும். ‘பெருசு’ நிச்சயம் பெரிய வெற்றி பெறும். ஸ்டோன் பெஞ்ச் மிகவும் விருப்பதுடன் படம் செய்யக்கூடியவர்கள். நல்ல சினிமாவை ரசிகர்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது தனி உற்சாகம். ’பெருசு’ படம் தொடங்கும்போதே பெரிய ட்விஸ்ட் இருக்கும். அதிலே நான் ஷாக் ஆகிவிட்டேன். படம் எடுத்துக் கொண்ட கதை எந்த இடத்திலும் முகம் சுழிக்க வைக்காது. தனலட்சுமி அம்மா எல்லாம் நமக்கு இன்னொரு மனோரம்மா மாதிரி. இவங்களும் தீபாக்காவும் செம காம்பினேஷன். எல்லா நடிகர்களும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும்”.
இயக்குநர் இளங்கோ ராம், “படத்தை நல்லவிதமாக கொண்டு போய் சேர்க்க நல்ல பேனர் கொண்ட தயாரிப்பாளர்கள் முக்கியம். அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு நன்றி. ‘ஆண்பாவம்’, ‘இன்று போய் நாளை வா’ போன்ற எண்பதுகளில் வந்த படங்கள் எனக்குப் பிடிக்கும். அதுபோல, குடும்பத்துடன் வந்து ஜாலியாக பார்க்கும்படியாக இந்தப் படம் இருக்கும். வைபவ்- சுனில் இந்த கதைக்கும் மிகப்பொருத்தமாக இருந்தார்கள். தனம், சுவாமிநாதன், கஜராஜ், தீபா என எல்லாரும் சூப்பராக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை குடும்பத்துடன் வந்து பார்க்கலாம். எந்த இடத்திலும் முகம் சுழிக்க மாட்டீர்கள். நல்ல டீம் எனக்கு கிடைத்துள்ளது”.
#Perusu Trailer looks super fun, Sending my best wishes to the team
https://t.co/Vs80H1976E#PerusufromMar14@actor_vaibhav @sunilreddy22@ilango_ram15 @kaarthekeyens#HarmanBaweja #HiranyaPerera#Karunakaran #Munishkanth @karthiksubbaraj @sainsasi@JustNiharikaNm… pic.twitter.com/LnAyXVAg2r
— VijaySethupathi (@VijaySethuOffl) March 9, 2025
நடிகர் வைபவ், “குடும்பத்துடன் பார்க்கும்படியான சூப்பராக கதையாக வந்துள்ளது. மார்ச் 14 நீங்கள் திரையரங்கில் பார்க்கும்போது உங்களுக்கே அது புரியும். தனம் அம்மா நடிப்பில் பின்னியிருக்கிறார். கஜராஜ், ரெடின், முனீஷ்காந்த் எல்லாரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் செம ஜாலியாக சென்றது. உங்களைப் போலவே நானும் படம் பார்க்க ஆவலாக உள்ளேன். என் அண்ணன் கூட முதல் முறையாக சேர்ந்து நடித்திருக்கிறேன். நன்றி”.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “நானும் ராம் சாரும் அடிக்கடி பேசிக் கொள்வோம். அவர் நல்ல படங்கள் வந்தால் என்னிடம் சொவ்லார். அப்படித்தான் ‘கூழாங்கல்’ படம் நாங்கள் பிரசண்ட் செய்வதாக இருந்தது. சில காரணங்களால் அது மிஸ் ஆனது. பின்பு ராம் சார் சொன்ன படம் தான் இந்த ‘பெருசு’. மற்றவர்களை சிரிக்க வைப்பது கடினமான விஷயம். பாலாஜி சிறப்பாக செய்திருக்கிறார். கதையின் முக்கியமான விஷயமே நடிகர்கள்தான். நானும்தான் வைபவ்வும் அவரது அண்ணனும் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என சொன்னேன். சமீபத்தில் படம் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. 18 வயதிற்கு மேல் இருப்பவர்கள் குடும்பத்துடன் நிச்சயம் பார்க்கலாம். நகைச்சுவையுடன் சேர்ந்து எமோஷனும் கதையில் இருக்கும். தனலட்சுமி மேம் சூப்பராக நடித்திருந்தார். சுவாமிநாதன், அப்பா, கருணா, கிங்க்ஸ்லி, முனீஷ்காந்த், சாந்தினி, நிஹாரிகா, சுனில் எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சரியாக எழுதப்பட்ட கதை இது. உங்கள் ஆதரவு தேவை” என்றார்.
மேலும் படிங்க: விஜய்யின் கடைசி படம்.. வெளியான 'ஜன நாயகன்' அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ