ARTICLE AD BOX
இயக்குநரடனான காதல்?.. மீண்டும் ஒருமுறை உறுதி செய்தாரா சமந்தா?.. ரசிகர்கள் சந்தேகம்
சென்னை: நடிகை சமந்தா இந்திய அளவில் கவனம் ஈர்த்த நடிகையாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக சிட்டாடல் ஹனிபன்னி வெப் சிரீஸ் வெளியானது. அது ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக புதிய வெப் சீரிஸில் நடித்துவருகிறார். இதற்கிடையே நாக சைதன்யாவை திருமணம் செய்து அந்த உறவிலிருந்து வெளியே வந்த அவர் தற்போது இயக்குநர் ராஜை காதலிப்பதாக தொடர்ந்து தகவல்கள் பரவிவந்த சூழலில்; மீண்டும் ரசிகர்கள் அந்தப் பேச்சை எடுக்கட் ஹொடங்கியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த சமந்தா கோலிவுட்டில் நடிகையாக தனது கரியரை தொடங்கினார். இங்கு அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலும் அவருக்கான கதவுகள் திறந்தன. அதன்படி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார். அந்தப் படத்தில் நடித்தபோது ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவுடன் சமந்தாவுக்கு காதல் ஏற்பட்டது. அந்தக் காதலுக்கு நாக சைதன்யாவின் வீட்டிலும் முழு சம்மதம் கிடைத்தது.
சாமின் திருமணம்: சம்மதம் கிடைத்ததைத் தொடர்ந்து கோவாவில் வைத்து அவர்களுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடித்தார். ஆனால் அது நாக சைதனாவின் வீட்டில் இருப்பவர்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. தொடர்ந்து நடிக்கக்கூடாது என்று அவர்கள் கண்டிஷன் போட்டதாகவும்; அதற்கு சாம் ஒத்துக்கொள்ளவில்லை என்றும் அதனால் நாக சைதன்யாவும், சமந்தாவும் பிரிந்துவிட்டார்கள் என்றும் தகவல்கள் தெரிவித்தன.

சைதன்யாவுக்கு இரண்டாவது திருமணம்: சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார். அவர்கள் இரண்டு பேருக்குமான திருமணம் கடந்த வருடம் ஹைதராபாத்தில் நடந்தது. இந்தத் திருமணத்துக்கு பிறகு சமந்தா குறித்து பேசியிருந்த நாக சைதன்யா, 'சமந்தா விவகாரத்தில் என்னை மட்டும் ஏன் குற்றவாளி போல் பார்க்கிறார்கள் என தெரியவில்லை' என்றார். அதேபோல் சைதன்யாவின் இரண்டாவது திருமணம் குறித்து தான் எந்தவிதமான பொறாமையும் படவில்லை என்றும் கூறினார்.
பிரபல நடிகருக்கு புற்றுநோய்..ஒரு நாள் வாழவே இதெல்லாம் வேண்டும்..கொஞ்ச நாள்தான் இருப்பேன் என உருக்கம்
ராஜுடன் காதல்?: நாக சைதன்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடந்தாலும் சமந்தா இன்னும் சிங்கிளாகத்தான் இருக்கிறார். அதேசமயம் சமீபத்தில் சிட்டாடல் இயக்குநர்களில் ஒருவரான ராஜுடன் சமந்தா கைகோர்த்தபடி வந்த புகைப்படம் ஒன்று ட்ரெண்டானது. அதனைப் பார்த்த ரசிகர்களோ அவர்கள் இரண்டு பேரும் காதலிக்கிறார்களா என்று சந்தேகத்தை கிளப்பினார்கள். மேலும் அவர்கள் டேட்டிங் செய்துகொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் பாலிவுட் வட்டாரத்திலிருந்து கசிந்துகொண்டிருக்கிறது.
கிசுகிசுவுக்கு பெயர் போன இயக்குநர்.. சகோதரிகளே அந்த விஷயத்தை ஓபனா சொல்லிட்டாங்களே.. அவர் இப்படியா?
மறுபடியும் சந்தேகம்: இந்நிலையில் சமந்தா இயக்குநர் ராஜைத்தான் காதலிக்கிறாரோ என்று ரசிகர்கள் மீண்டும் சந்தேகத்தை எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள். அதாவது அவர்களது நண்பர் ஒருவரது பிறந்தநாள் கொண்டாட்டம் சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. அதில் ராஜ், சமந்தா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் ராஜும், சமந்தாவும் ஒன்றாகவே நின்றார்கள். அதனைப் பார்த்த ரசிகர்களோ எங்கே போனாலும் இருவரும் ஜோடியாகவே இருக்கிறார்களே; கண்டிப்பாக இவர்களுக்குள் காதல்தான் என்று ரசிகர்கள் ஓபனாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
ரசிகர்களின் கோரிக்கை: அதுமட்டுமின்றி சமந்தா காதல் செய்வது ஒன்றும் தவறு இல்லை. சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொண்டது போல் சாமும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகவேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருவது குறிப்பிடத்தக்கது.