வேற லெவல் டேஸ்டில் மரவள்ளிக்கிழங்கு தோசை -தட்டப்பயிறு குழம்பு ரெசிபிஸ்!

3 days ago
ARTICLE AD BOX

ன்றைக்கு வேற லெவல் டேஸ்டில் மரவள்ளிக்கிழங்கு தோசை மற்றும் தட்டப்பயிறு குழம்பு ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

மரவள்ளிக்கிழங்கு தோசை செய்ய தேவையான பொருட்கள்:

வரமிளகாய்-5

கொத்தமல்லி-சிறிதளவு.

சீரகம்-1/4 தேக்கரண்டி.

சோம்பு-1/2 தேக்கரண்டி.

மரவள்ளிக்கிழங்கு-1 கப்.

தோசை மாவு-1/2 கப்.

வெங்காயம்-1

உப்பு-1/4 தேக்கரண்டி.

பெருங்காயத்தூள்-சிறிதளவு.

எண்ணெய்-தேவையான அளவு.

மரவள்ளிக்கிழங்கு தோசை செய்முறை விளக்கம்.

முதலில் மிக்ஸியில் வரமிளகாய் 5, கொத்தமல்லி சிறிதளவு, சோம்பு ½ தேக்கரண்டி, சீரகம் ¼ தேக்கரண்டி சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இத்துடன் தோல் நீக்கி சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் மரவள்ளிக்கிழங்கு 1 கப் சேர்த்து தண்ணீர் சிறிது விட்டு அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு பவுலில் மாற்றிவிட்டு அத்துடன் ½ கப் தோசை மாவை சேர்த்துக்கொள்ளவும். இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, உப்பு ¼ தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு, சீரகம் ¼ தேக்கரண்டி, பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும்.

இப்போது அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து கல் காய்ந்ததும் மாவை ஊற்றி தோசை இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான மரவள்ளிக்கிழங்கு தோசை தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை விட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

இதையும் படியுங்கள்:
அல்டிமேட் சுவையில் மஷ்ரூம் பெப்பர் மசாலா - கேரட் சட்னி 'க்விக்கா' செய்யலாம் வாங்க!
Tapioca Dosa-Tattapairu Kulambu Recipe

தட்டப்பயிறு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

மசாலா செய்ய:

எண்ணெய்-1 தேக்கரண்டி.

மிளகு-1/2 தேக்கரண்டி.

சோம்பு-1/2 தேக்கரண்டி.

சீரகம்-1/2 தேக்கரண்டி.

பட்டை-1

கிராம்பு-2

சின்ன வெங்காயம்-5

பூண்டு-4

இஞ்சி-1 துண்டு.

கொத்தமல்லி-சிறிதளவு.

தேங்காய்-1 கைப்பிடி.

கசகசா-1/2 தேக்கரண்டி.

குக்கரில் செய்ய:

எண்ணெய்-2 தேக்கரண்டி.

சின்ன வெங்காயம்-5

பூண்டு-3

கருவேப்பிலை-சிறிதளவு.

உப்பு-தேவையான அளவு.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

மல்லித்தூள்-2 தேக்கரண்டி.

தட்டப்பயிறு-1 கப்.

தக்காளி-1

கொத்தமல்லி-சிறிதளவு.

தட்டப்பயிறு குழம்பு செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகு ½ தேக்கரண்டி சீரகம் ½ தேக்கரண்டி சோம்பு ½ தேக்கரண்டி, பட்டை 1, கிராம்பு 2 சேர்த்து வதக்கி விட்டு 5 சின்ன வெங்காயம், பூண்டு 4, இஞ்சி 1 துண்டு, கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து மிக்ஸியில் போட்டுக்கொள்ளவும். இப்போது இத்துடன் 1 கைப்பிடி தேங்காய், ½ தேக்கரண்டி கசகசா சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
ரெசிபி - கேரளா ஸ்டைல் நெய் சோறு + அப்பளப்பூ குழம்பு
Tapioca Dosa-Tattapairu Kulambu Recipe

குக்கரில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, சின்ன வெங்காயம் 5, பூண்டு 3, கருவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மல்லித்தூள் 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்துவிட்டு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து கலந்துவிட்டு 2 நிமிடம் வேக விடவும். பிறகு 2 மணி நேரம் ஊற வைத்த தட்டப்பயிறு 1 கப்பை இத்துடன் சேர்த்துக் கொண்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துவிட்டு கடைசியாக பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து 5 விசில் விட்டு எடுக்கவும். கடைசியாக கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.

அவ்வளவு தான் சிம்பிளான தட்டைப்பயிறு குழம்பு தயார். நீங்களும் இந்த ஆரோக்கியமான ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.

Read Entire Article