ARTICLE AD BOX
தக்காளி, வெள்ளரிக்காய் இரண்டுமே சுவையானது என்றாலும் இவை இரண்டையும் சேர்த்து சாலட் செய்வது செரிமான சக்திக்கு உகந்ததல்ல என்று கூறப்படுகிறது.
தக்காளி மற்றும் வெள்ளரி இரண்டும் செரிமானப் பண்பில் வேறுபடுகின்றன. தக்காளியில் அமிலங்கள் உள்ளன. வெள்ளரியில் அமிலங்கள் கிடையாது. இது ஆல்கலைன் சத்து உள்ளது. இந்த இரண்டையும் சேர்க்கும்போது தக்காளியின் அமிலங்கள் ந்யுட்ரலைஸ் ஆகி செரிமானம் தாமதப்படுத்தப்படும் இதனால் வயிறு உப்புசம் செரிமானக்கோளாறு ஏற்படும்.
இந்த இரண்டையும் சேர்ப்பதால் ஊட்டச்சத்து உறிஞ்சப் படுவதில் பிரச்னை ஏற்படுவதாக அறியப்படுகிறது. தக்காளியில் சி சத்தும், லைகோபீனும் உள்ளன. வெள்ளரிக்காயில் தண்ணீர் சத்துக்கள் உள்ளன. வெள்ளரிக்காயின் நீர்ச்சத்து தக்காளியின் ஊட்டச்சத்தை நீர்த்துப் போகச்செய்யும். இதனால் சரியான சத்து கிடைக்காது. இதனால் வைட்டமின் மற்றும் ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் உறிஞ்சப்படுவது குறையும்.
ஆயுர்வேத உணவு முறைப்படி உணவு உடம்பின் நிலையை சமப்படுத்த வேண்டும். ஆயுர்வேதத்தில் வெள்ளரி குளிர்ச்சியையும், நீர்ச்சத்தையும் கொண்டுள்ளது. ஆனால் தக்காளியோ உடலுக்கு வெப்பம் தரக்கூடியது. இதனால் இரண்டும் ஒன்றாக சேர்க்கும் போது உடல் பாலன்ஸ் பிரச்னை ஏற்படும். வாசனை சமநிலையின்மை இரண்டுமே ஊட்டச்சத்து நிறைந்ததாக இருந்தாலும் இரண்டும் சேர்க்கும்போது சுவை வித்யாசமாகும்.. தக்காளியை பெல் பெப்பர் மற்றும் அவகேடோவுடன் சேர்ப்பது தான் சிறந்தது. இதனால் அதிக ஊட்டச்சத்து கிடைக்கும்.
எல்லோருக்குமே செரிமானக்கோளாறு ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஆனால் irritable bowel syndrome உள்ளவர்களுக்குப் செரிமான பிரச்னை ஏற்படுத்தும். உங்கள் உடம்பிற்கு எப்படி ஓத்துக் கொள்கிறது என்பதை அறியவும்.
செரிமான பிரச்னைகள் வராமலிருக்க தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை வேறு உணவுகளோடு சேர்க்கவும். தக்காளியை ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த அவகேடோ மற்றும் ஆலிவ்வுடன் சேர்த்தால் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படும். வெள்ளரிக்காயை யோக்ஹார்ட் மற்றும் புதினா இவைகளோடு சேர்க்க சமநிலை ஏற்பட்டு அதிகமான ஊட்டச்சத்தை நன்கு பெற முடியும்.
வீட்டிலேயே ஜுஸ் தயாரிக்கிறீங்களா? இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க…
மிக்சி சூடாக இருக்கும்போது பயன்படுத்தாதீர்கள். ஜுஸரில் இருக்கும் அதிகப்படியான வெப்பம் பழச்சாற்றில் ஆரோக்கியத்தைக் குறைத்து அதன் சத்துக்களை அழித்துவிடும்.
பெரும்பாலானோர் ஜுசில் ஐஸ் போட்டு குடிப்பதையே விரும்புவார்கள். ஜுஸை சாதாரண வெப்ப நிலையிலேயே குடிக்க வேண்டும்.
வீட்டில் தயாரித்த ஜுஸை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டாம். இதன்மூலம் அதன் ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிடும்.
ஜுசில் அதிக சீனி சேர்க்கக்கூடாது. இயற்கையாகவே அதில் சர்க்கரை இருக்கும். அதனால் சர்க்கரை போடவேண்டிய அவசியம் இல்லை.
சிலர் காய்கறி ஜுஸ் குடிப்பார்கள். அதில் உப்பு அல்லது மசாலாக்களோ சேர்க்கக் கூடாது.
ஜுஸ் போடுவதற்கு முன் விதைகளை அகற்றி விடவேண்டும்.