சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற இராசவள்ளி கிழங்கின் அளப்பரிய நன்மைகள்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

5 hours ago
ARTICLE AD BOX

Rasavalli tuber: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற இராசவள்ளி கிழங்கின் அளப்பரிய நன்மைகள்!

குறிப்பிட்ட காலநிலையில் கிடைக்கும் இராசவள்ளி கிழங்கின் நன்மைகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், இதன் நன்மைகளை அறிந்து கொண்டால், யாராக இருந்தாலும் தேடிப் பிடித்து சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அளப்பரிய பல நன்மைகளை வழங்குகிறது.

நம் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதற்கும், நோய்கள் வராமல் தடுப்பதற்கும் அந்தந்த காலநிலையில் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை சாப்பிட வேண்டும். ஏனெனில், அந்தந்த காலநிலையில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் அந்தந்த சீதோஷ்ண நிலையோடு தொடர்பு கொண்டது. அந்த சீதோஷ்ண நிலைக்குத் தேவைப்படும் ஆற்றலை, அந்த உணவு நமது உடலுக்கு தர வல்லது.

அவ்வகையில் குறிப்பிட்ட காலநிலையில் கிடைக்கும் இராசவள்ளி கிழங்கின் நன்மைகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், இதன் நன்மைகளை அறிந்து கொண்டால், யாராக இருந்தாலும் தேடிப் பிடித்து சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அளப்பரிய பல நன்மைகளை வழங்குகிறது.

இராசவள்ளி கிழங்கில் உள்ள சத்துக்கள்

உடலுக்கு ஊட்டம் தரும் மிகச் சிறந்த உணவு இராசவள்ளி கிழங்கு. இதில் வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் இருக்கும் சர்க்கரை சத்து மிகவும் தரமானது. இதில் நார்ச்சத்தும் அதிகளவில் நிறைந்து காணப்படுகிறது. இராசவள்ளி கிழங்கில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கு

இராசவள்ளி கிழங்கு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாக இருக்கிறது என சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிகவும் நிதானமாகவே அதிகரிப்பதால், சர்க்கரை நோயாளிகளும் இராசவள்ளி கிழங்கை மருத்துவர்களின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.

இராசவள்ளி கிழங்கின் நன்மைகள்

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
உடலில் இருக்கும் செல்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்க வல்லது.
இராசவள்ளி கிழங்கு இளமையைப் பாதுகாக்கும். ஆகையால் இது, இளமையைப் பாதுகாக்கும் மிகச் சிறந்த உணவாகத் திகழ்கிறது.
இதில் இருக்கும் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் இரத்தக் குழாய்கள் நன்றாக சுருங்கி விரிய உதவி செய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
உடல் பருமனாக உள்ளவர்களும், உடல் எடையை குறைக்க இதனை சாப்பிடலாம்.
இராசவள்ளி கிழங்கை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காது. ஆகையால், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
இந்தக் கிழங்கு கண்பார்வையை கூர்மையாக்க வல்லது.
இதனை சாப்பிட்டதும் பசி அடங்கிய உணர்வு ஏற்படும். அடுத்ததாக நீண்ட நேரம் பசி எடுக்காது. ஆகையால், விரதமிருக்கும் காலங்களில் இராசவள்ளி கிழங்கு சார்ந்த உணவுகளை சாப்பிடும் வழக்கம் உள்ளது.
இராசவள்ளி கிழங்கின் மாவும் சிறந்த உணவுப் பொருள் தான். இதில் பல விதமான பிஸ்கெட், கேக் மற்றும் ரொட்டிகள் தயாரிக்கப்படுகிறது. இதிலிருந்து குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவும் தயாரிக்கப்படுகிறது.

Read Entire Article