ARTICLE AD BOX
புவனேஷ்வர்: சட்டீஸ்கர் மாநிலம், புவனேஷ்வரில் உள்ள அழகு நிலையத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் தனது தொடையில் டாட்டூ குத்தியுள்ளார். இது புகழ்பெற்ற ஜெகந்நாதரின் உருவமாகும். பெண் பச்சைக்குத்திக்கொள்ளும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இது மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் செயல் என்று கூறி கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஜெகந்நாதரின் பக்தர்கள் சாஹிர் நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஒரு பெண் தவறான இடத்தில் கடவுளின் உருவத்தை பச்சை குத்தியிருப்பது எங்களது உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. இது அனைத்து ஜெகந்நாதர் பக்தர்கள் மற்றும் இந்துக்களுக்கும் பெரிய அவமானமாகும். இதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
The post வெளிநாட்டு பெண்ணின் தொடையில் ஜெகந்நாதர் டாட்டூ appeared first on Dinakaran.