பொருளாதாரத் துறையில் மோடி ஆட்சி தோல்வி: ராகுல் காந்தி குற்றஞ்சாட்டு

5 hours ago
ARTICLE AD BOX

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பொருளாதாரத் துறையில் தோல்வி, பணவீக்கம் மற்றும் பொய்கள்தான் பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

மோடி ஆட்சியில் ஏதாவது பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது என்றால், அது பொருளாதாரத் துறையில் தோல்வி, பணவீக்கம் மற்றும் பொய்கள் மட்டும்தான்.

மத்திய அரசு நியாயமற்ற வரிகளை நீக்கி, ஏகாதிபத்தியத்தை அகற்றி, வங்கிகளின் கதவுகளைத் திறந்து, திறமையானவர்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டும். அப்போதுதான் பொருளாதாரக் கட்டமைப்பு, வேலைவாய்ப்பு மற்றும் வலுவான இந்தியா உருவாகும் என்று ராகுல் காந்தி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பொருளாதாரத்தைக் கையாண்டு வரும் முறை குறித்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

விலைவாசி உயர்வு, தனியார் முதலீடுகள் குறைவது போன்றவை சாமானிய மக்களைப் பெரிதும் பாதித்து வருவதாக அக்கட்சி கூறுகிறது.

Read Entire Article