ARTICLE AD BOX
சாப்பாடு சாப்பிட்டவுடன் வெற்றிலை மென்று சாப்பிடும் பழக்கம் நமது பழங்கால உணவுப் பழக்கத்தில் இருந்தது. இப்போதுவும் ஸ்வீட் பீடாவாக நாம் விருந்துகளில் சாப்பிடுகிறோம். வெற்றிலையை மென்று சாப்பிடும்போது நமது உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்று பாருங்கள்.
வெற்றிலையின் நன்மைகள்
வெற்றிலை செரிமான எண்சைம்களை சுரக்கச் செய்கிறது. இதனால் இது செரிமானத்தைத் தூண்டுகிறது மற்றும் வயிறு உப்புசம், அசிடிட்டி மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது. இது பொது குடல் ஆரோக்கியத்துகும், சாப்பிட்டவுடன் செரிமானத்தைத் தூண்டவும் இயற்கை காரணியாக உள்ளது.
ஆன்டிபாக்டீரியல் குணங்கள்
வெற்றிலையின் ஆன்டிபாக்டீரியல் குஷங்கள், குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது. குடல் நுண்ணுயிர்களை சமநிலையில் வைக்கிறது. தொற்றுக்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. செரிமானக் கோளாறுகளைப் போக்குகிறது.
இதமளிக்கும் தன்மை
மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தைப் போக்குகிறது. வெற்றிலையின் இதமளிக்கும் தன்மை, நரம்பு மண்டலத்துக்கு இதமளிக்கிறது. மனஅழுத்தத்தைக் குறைக்கிறது மேலும் மனநிலையை மேம்படுத்துகிறது. மகிழ்ச்சியைத் தரும் ஹார்மோன்களான செரோட்டினின் மற்றும் டோப்பமைன் ஆகியவற்றைத் தூண்டி மகிழ்ச்சியைத் தருகிறது-
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
வெற்றிலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், உடலை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை மேம்படுத்துகிறது. ஒட்டுமொத்த கழிவுநீக்கத்தை உறுதிசெய்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இன்சுலின்
இன்சுலின் இயக்கத்தை மேம்படுத்தி வெற்றிலைகள் ரத்த சர்க்கரையை முறையாகப் பராமரிக்கிறது. ஆக்ஸிடேட்டில் அழுத்தத்தைக் குறைக்கிறது. நீரிழிவு மற்றும் ரத்த சர்க்கரையில் ஏற்ற இறக்கம் உள்ளவர்களுக்கு நல்லது.
ஆன்டி பாக்டீரியல் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள்
இதன் வீக்கத்துக்கு எதிரான மற்றும் ஆன்டிபாக்டீரியல் குணங்கள், சுவாச கோளாறுகளைக் குறைக்கிறது. இருமலைப் போக்குகிறது. நெஞ்சு சளியை இளக்குகிறது. சுவாச ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. தொற்றுக்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது.
வளர்சிதை
செரிமானத் தூண்டி, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் தன்மையை அதிகரித்து உடலின் வளர்சிதைக்கு உதவுகிறது. இது உடல் உணவை நன்றாக மென்று சாப்பிட உதவுகிறது. ஆற்றல் அளவு மற்றும் உடல் எடை மேலாண்மைக்கும் உதவுகிறது.
சுவாசம்
வெற்றிலை மெல்லும்போது வாயில் உள்ள ஆபத்துக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் கொல்கிறது. பற்களில் சிதைவு ஏற்படாமல் தடுக்கிறது. ஈறுகளை வலுவாக்குகிறது. சாப்பிட்டவுடன் வாய் சுகாதாரத்தைக் காக்க உதவும் இயற்கை நிவாரணியாகிறது.

டாபிக்ஸ்