வெற்றிமாறன் பட வாய்ப்பை மறுத்த சீரியல் நடிகை கோமதி பிரியா!

12 hours ago
ARTICLE AD BOX

சின்ன திரை நடிகை கோமதி பிரியா வெற்றிமாறன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதனை நிராகரித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் தொடர் சிறகடிக்க ஆசை. இத்தொடரில் வெற்றி வசந்த் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக நடிகை கோமதி பிரியா நாயகியாகவும் நடிக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் இருக்கும் தொடராக சிறகடிக்க ஆசை உள்ளது.

இத்தொடரில் நாயகியாக நடித்துவரும் கோமதி பிரியா, தெலுங்கு தொடரில் நடித்து பிரபலமடைந்தவர். அதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழில் சிறகடிக்க ஆசை தொடரில் நடித்து வருகிறார்.

கோமதி பிரியா

இதோடு மட்டுமின்றி மலையாளத்திலும் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் சிறந்த நடிகைக்கான சின்ன திரை விருதையும் கோமதி பிரியா வென்றார்.

மதுரையைச் சேர்ந்த இவர் தற்போது சின்ன திரையில் பிஸியான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார். எனினும் சமூக வலைதளங்களில் அவ்வபோது புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களுடனும் உரையாடி வருகிறார்.

கோமதி பிரியா

இதனிடையே சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கோமதி பிரியா, பட வாய்ப்புகள் குறித்து மனம் திறந்துள்ளார்.

அதில் தான் தவறவிட்ட படங்களில் வெற்றிமாறனின் அசுரன் படமும் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார். அப்படத்தில் இளம் வயது தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ஆடிஷன் சென்றதாகவும், அதில் தேர்வானதாகவும் குறிப்பிட்டார்.

எனினும் அப்போது தெலுங்கு மொழித் தொடரில் நடித்து வந்ததால், அசுரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதாகவும் குறிப்பிட்டார். அதற்காக தான் வருந்தவில்லை என்றும் சின்ன திரை தொடர்களில் நிறைவாக நடித்து வருவதாகவும் தெரிவித்தார்.

கோமதி பிரியா தேர்வான பாத்திரத்தில், நடிகை அம்மு அபிராபி நடித்திருந்தார். அந்தப் படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | சிறகடிக்க ஆசை மீனா குறித்து வருத்தம் தெரிவித்த எதிர்நீச்சல் இயக்குநர்!

Read Entire Article