சத்தீஸ்கரில் 3 நக்சல்கள் சரண்!

10 hours ago
ARTICLE AD BOX

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 3 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

சுக்மா மாவட்டத்தில் இன்று (மார்ச் 18) மட்காம் எர்ரா பாபு (வயது 26), சோடி தேவா (35) மற்றும் மட்காம் ஹத்மா (41) ஆகிய மூன்று நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது சரணடைந்த பாபு என்பவர் சேத்னா நாட்யா மண்டுலி எனும் மாவோயிஸ்டு அமைப்பின் தலைவராகவும், ஹாத்மா என்பவர் தண்டாகார்ன்யா ஆதிவாசி கிசான் மஜ்தூர் சங்காதான் எனும் அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பொதுத்துறை நிறுவனத்திடம் மர்ம கும்பல் மோசடி! ஒரு எழுத்தால் ரூ. 54 லட்சம் இழப்பு!

மேலும், அவர்கள் இருவர் மீதும் பாதுகாப்புப் படையினர் தலா ரூ.2 லட்சம் சன்மானம் அறிவித்து தேடி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, மூன்றாவது நபரான தேவா என்பவர் மற்றொரு மாவோயிஸ்டு அமைப்பின் துணைத் தலைவராக செயல்பட்டு வந்துள்ளார்.

இதுகுறித்து, அம்மாநில காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், சரணடைந்த மூவரும் மாநில அரசின் நக்சல் எதிர்ப்பு கொள்கைகளை பாராட்டி ஆதரித்ததாகவும் அவர்களது மறுவாழ்விற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Read Entire Article