ARTICLE AD BOX
வெளிநாடுகளில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பல குடும்பங்கள் ‘பிரட்’- ஐ அன்றாட உணவுகளில் ஒன்றாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. பிரட்டை டோஸ்ட் செய்து சாப்பிட சிலருக்குப் பிடிக்கும். சிலருக்கு வெறும் பிரட்டாக சாப்பிட்டால்தான் திருப்தி.
ஆனால், வெறும் பிரட்டை சாப்பிடுவதை
விடவும் டோஸ்ட் செய்து சாப்பிடுவதே சிறந்தது என்று ஆரோக்கிய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பிரட்டை டோஸ்ட் செய்து சாப்பிடும்போது இரத்தத்தில்
சக்கரை அளவு மற்றும் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பது 25 சதவீதம் மட்டுப்படும் என்று அவர்கள்
சொல்கிறார்கள். டோஸ்ட் செய்யும்போது அதில் நடைபெறும் சில வேதியல் மாற்றங்கள் பிரட்டை செரிமானத்துக்கு எளிதானதாக மாற்றுவதாகவும் கார்போஹைட்ரேட்டை பல்வேறு கூறுகளாக உடைப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அதற்காக அதிக
எண்ணெய், நெய் ஊற்றி டோஸ்ட் செய்து சாப்பிடுவது, ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.