இவர்களுக்கு குறைவான தண்டனை… இவர்களுக்கு கடுமையான தண்டனை – லண்டன் அரசு அதிரடி!

3 hours ago
ARTICLE AD BOX

லண்டன் ஒரு சில இன மக்களுக்கு குறைவான தண்டனை, ஒரு சில குழு மக்களுக்கு அதிக தண்டனை என்ற சட்டத்தை கொண்டுவந்திருக்கிறது.

ஒரு நாட்டில் ஒரு மனிதன் எப்படிபட்ட தவறு செய்கிறான் என்பதற்கேற்ப தண்டனைகள் வழங்கப்படும். ஒருநாள், இரண்டு நாட்கள் சிறை தண்டனை முதல் மரண தண்டனை, ஆயுள் தண்டனை வரை குற்றத்திற்கு ஏற்றாற்போல் விதிக்கப்படும். ஆனால், குற்றம் செய்தது எந்த இனத்தைச் சேர்ந்தவன் என்றெல்லாம் பார்த்து தண்டனை அளிக்க மாட்டார்கள்.

சட்டரீதியாகவும் மறைமுகமாகவும் ஒரு இன மனிதனை மாட்டிவிட்டு தண்டனைக்கு உட்படுத்தப்படுவதுபோல், சில படங்களில் காண்பிப்பார்கள். ஆனால், எந்த சட்டமும் இப்படி அமைக்கப்பட்டிருக்காது. அதேபோல் சிறு குற்றங்கள் மற்றும் முதல் முறை குற்றவாளிகளுக்கு குறைந்த தண்டனை வழங்கப்படுகிறது.

குற்றவாளிகள் திருந்தி வாழ வாய்ப்பு அளிக்கும் வகையில், சமூக சேவை போன்ற மாற்று தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

ஆனால், லண்டனில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அதாவது முஸ்லிம் மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு வெள்ளை பிரிட்டிஷ் மக்களை விட குறைவான தண்டனை வழங்கப்படலாம். இந்த நடவடிக்கை "சமத்துவம்" என்ற பெயரில் நிறுவன ரீதியான பாகுபாடு காட்டப்படுவதாகத் தெரிகிறது.

மேலும் இந்தச் சட்டத்தின்படி குற்றவாளியின் சாதி, மதம், கலாச்சாரம், ஆணா, பெண்ணா, திருநங்கையா என அனைத்துமே ஒரு மனிதனின் தண்டனையை தீர்மானிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது,.

இதன் பொருளானது குறிப்பிட்ட சில மக்கள்  எளிமையான  தண்டனைகளைப் பெறலாம், மற்ற குழுக்கள் கடுமையான தண்டனைகளைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் லண்டன் மக்களுக்கு மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிற்கு பிடிக்கவே இல்லை. இதனால், தொடர்ந்து விமர்சனங்கள் வந்தன.

இந்த சட்டத்தில் சில பாகுபாடுகள் இருப்பதாகவும், சில குழுக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.  சட்டத்தை அமல்படுத்தும் முன், அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
கோடை வெயிலை சமாளிக்க நீர் மோர் போதுமே!
London
Read Entire Article