ARTICLE AD BOX
உணவுகளை பாதுகாப்பாக பாக் செய்வதற்கு அலுமினியம் ஃபாயில்கள் பயன்படுத்துவது சகஜமாகிவிட்டது. இதனால் உணவிற்குள் அலுமினியம் ஊடுருவி, ஆரோக்கிய கேட்டை விளைவிக்கும் அபாயம் உள்ளது தெரியுமா? ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு நிலையான ஆயுள் உண்டு. அதற்குப் பிறகு உணவுப் பொருட்கள் சுற்றியுள்ள சூழலிலிருந்து பாக்டீரியாவை கிரகித்துக் கொள்கின்றன. இரண்டு மணி நேரத்தில் நிறைய பாக்டீரியாக்கள் உருவாகும் அலுமினியம் தாள் அத்தகைய பாக்டீரியாக்கள் வளரும் அபாயத்தை அதிகரிக்கிறது. அலுமினியம் தாள்களில் பேக் செய்யப்படும் உணவை சாப்பிடுவதால் ஆண்களுக்கு ஆண்மை குறைகிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது. மேலும் டிமென்ஷியா மற்றும் அல்சீமியர் போன்ற நோய்கள் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமல்ல சிறுநீரக நோய் , மற்றும் மூச்சுப் பிரச்னையையும் ஏற்படுகிறதாம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவதாக அறியப்படுகிறது. ஆகவே இந்த தாளை தவிர்த்து சுற்றுச்சூழல் நண்பனாக செயல்படும் பேக்கிங் முறைகள் பற்றிப் பார்ப்போம்.
பீஸ்வாக்ஸ் wrap
உங்கள் சாண்ட்விச்சுகள் பாக்செய்ய, பழங்கள் காய்கறிகளை வைக்க சற்றுச்சூழலின் நண்பனான பீஸ்வாக்ஸ் ராப் உபயோகித்து உணவைப் பாதுகாக்கலாம்.
கண்ணாடி கன்டெய்னர்கள்
உங்கள் உணவுகளை எடுத்துச் செல்வதற்கும், மிச்சம் மீதியை எடுத்து வைப்பதற்கும் கண்ணாடி கன்டெய்னர்கள் மிகச் சிறந்தவை. இதில் எந்தவித கெமிகல்களும் கிடையாது. மைக்ரோவேவ் அவன்களில் உபயோகிக்க ஏற்றவை.
செடார் wraps
இது செடார் மரவகையிலிருந்து செய்யப்படுகிறது. இதை தண்ணீரில் நனைத்து உணவைச் சுற்றி வைக்கலாம். மரவகையாகையால் நல்ல வாசனையுடன் இருக்கும். ஒரு முறை உபயோகித்தபிறகு திரும்ப பயன்படுத்த முடியாது. ஆனால் மறுசுழற்சி செய்ய முடியும்.
சிலிகான் உணவு கவர்கள்
ப்ளாஸ்டிக் மற்றும் அலுமினிய ஃபாயில்களுக்கு சிறந்த மாற்றாக உள்ளது. இதனால் கேன்கள், கப்கள், பௌல்கள், இவற்றை நன்றாக சீல் போட்டு மூடுவது போல் மூட முடியும். உணவுகள் நீண்ட நேரம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். ஆனால் நல்ல குவாலிடியாக வாங்க வேண்டும்.
Cloth wraps
காட்டன் மற்றும் லினன் இவற்றைக் கொண்டு ப்ரெட், சீஸ் மாறும் உலர்ந்த பண்டங்களை பாக் செய்யலாம்.
பார்ச்மெண்ட் பேப்பர்
இதில் எந்தவித கெமிகல்களும் இல்லாதது சூடான பொருட்களை வைக்கும் போது ஒரு தீங்கும் ஏற்படாது.
ப்ரௌன் பேப்பர்
ப்ரெட், கொட்டைகள் மற்றும் தின்பண்டங்களை இதில் வைக்கலாம். இது மறுசுழற்சி செய்யக்கூடியது.
வாழை இலை
உணவை இயற்கையான முறையிலும் ஆரோக்கியமான முறையிலும் பேக் செய்ய மிகவும் ஏற்றது வாழையிலைதான். உடல் ஆரோக்கியம் சிறந்ததாக இருக்கும். உணவில் இருக்கும் நச்சுக்கள் கூட வாழையிலையில் சாப்பிடும் போது நீங்கிவிடும். இதில் ஆன்டி ஆக்சிடண்ட் இருப்பதால் நோய் எதிர்ப்புசக்தி கிடைக்கும். இதில் உள்ள க்ளோரோஃபில் உணவை சீக்கிரம் செரிமானமடையச் செய்யும்.
மந்தார இலை
வாழையைப் போன்று மந்தார இலையை உணவு பேக் செய்ய உபயோகிப்பது சிறந்தது.