ARTICLE AD BOX
மக்கள் மனதைக் கவர்ந்த சீரியல் ஒன்று விரைவில் முடிவுக்கு கொண்டு வருகிறார்கள். அதே சீரியலின் பாகம் 2 வரப்போகிறதாம். வாருங்கள் எந்த சீரியல் என்று பார்ப்போம்.
விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி போன்றவை சீரியல்களுக்கு பெயர்ப்போனவை. அதற்கு போட்டியாக தந்தி, கலர்ஸ் போன்றவை தற்போது வந்திருக்கின்றன. இந்த சேனல்களில் டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. அதுவும் சன் டிவியில் சில சீரியல்கள், விஜய் டிவியில் சில சீரியல்கள் மற்றும் ஜீ தமிழில் சில சீரியல்கள் ஒன்றுக்கொன்று டிஆர்பி ரேட்டிங்கில் மோதிக்கொண்டு வருகின்றன.
இதில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மக்கள் மனம் கவர்ந்த ஒரு நாடகம் இதயம். இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரங்கள் என்றால், ஆதி, பாரதி மற்றும் தமிழ் ஆகிய கதாபாத்திரங்கள். இவர்களுக்காகவே சீரியல் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் தற்போது ஆதி தன்னுடைய மனைவி மற்றும் மகளாக நடிக்க பாரதி மற்றும் தமிழை அழைக்கிறார். அதன்படி நடிக்கும்போது தமிழ் “ஆதி அப்பா” என்று அழைக்கிறார். இதை கேட்டதும் ஆதிக்கு தன்னை அறியாமலேயே இதயத்தில் ஒருவித உணர்வு ஏற்படுகிறது.
இன்னும் கூடிய விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என்றே இதன்மூலம் எதிர்பார்க்கப்பட்டது. இப்படியான நேரத்தில், இந்த சீரியலின் க்ளைமக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டதாம்.
இப்படி இந்த சீரியலை விரைவில் முடிக்க காரணமும் உள்ளது என்று கூறப்படுகிறது. அதாவது கதை டிராக் கொஞ்சம் மாறிப்போனதால் மக்கள் சில நெகட்டிவ் கமெண்ட்ஸ்களையும் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இதை சரி செய்யும்விதமாக முதலில் ஆண்டாள் அழகர் கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இப்போது இந்த கதாபாத்திரங்கள் மக்கள் மனதைப் பிடித்துவிட்டது. தற்போது இந்த ஆண்டாள் அழகர் கேரக்டரை வைத்து தான் இதயம் பார்ட் 2 என்ற சீரியல் வரப்போகிறது.
இந்த இதயம் சீரியல் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒளிபரப்பு செய்யப்பட்டு கிட்டத்தட்ட 650 எபிசோடுக்கு மேல் ஓடி மக்கள் மனதை கவர்ந்து ஹிட் சீரியல் வரிசையிலும் இடம் பிடித்தது.