ARTICLE AD BOX
Benefits of walking for PCOD : பிசிஓடி பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தினமும் ஆயிரம் அடிகள் நடப்பதன் மூலம் அது அவர்களது ஆரோக்கியத்தில் பல வழிகளில் நன்மைகளை வழங்கும்.

நாம் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று தான் விரும்புகிறோம். எனவே, தினமும் காலையில் சிறிது நேரம் நடைபயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும். இத்தகைய சூழ்நிலையில், பிசிஓடி பிரச்சினையால் பல பெண்கள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சரியான உணவு, போதுமான அளவு தூக்கம், தினமும் உடற்பயிற்சி செய்தல் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விலகி இருப்பது ஆகியவற்றை பின்பற்றுவது மிகவும் முக்கியம். இவற்றை தினமும் பின்பற்றுவதன் மூலம் இந்த பிரச்சினையே பெரிய அளவில் மாற்றியமைக்க முடியும். இந்நிலையில், பிசிஓடி பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தினமும் 1000 படிகள் நடப்பதால் பல வழிகளின் நன்மை கிடைக்கும். இது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக பிசிஓடி பிரச்சனையால் பாதிக்கப்பட்ட்ட பெண்கள் எடை அதிகரிப்பு, அதிகமான மன அழுத்தம், பலவீனமான செரிமம் போன்ற பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். தினமும் 1000 அடிகள் நடப்பதன் மூலம் பல பிரச்சனைகளை சரி செய்து விடலாம். அதாவது,
1. பிசிஓடி-யால் பாதிக்கப்பட்ட பெண்கள் தினமும் 1000 அடிகள் நடப்பதன் மூலம் உடலில் குளுக்கோஸ் அளவை குறைத்து விடலாம்.
2. பிசிஓடி இன்சுலின் எதிர்ப்பு காரணமாக உடலில் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். தினமும் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
இதையும் படிங்க: அட! இரவில் வெறும் 10 நிமிட 'வாக்கிங்'.. இத்தனை நோய்களை விரட்டுமா?

3. பிசிஓடி பிரச்சனை உள்ளவர்கள் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து உணவு எளிதில் ஜீரணமாகிவிடும். மேலும் வாயு, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
4. பிசிஓடி -யால் எடை அதிகரிக்கும். ஆனால் தினமும் ஆயிரம் காலடிகள் நடப்பதன் மூலம் அதிகரித்த எடையை சுலபமாக குறைத்து விடலாம்.
இதையும் படிங்க: அடேங்கப்பா! வெறும் 2000 காலடிகள் வாக்கிங்ல இவ்ளோ நன்மைகள் இருக்கா?

5. பிசிஓடி பிரச்சனைகள் மன அழுத்த ஹார்மோன் உடலில் அதிகரிக்கும். இதனால் அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஏற்படும். எனவே மன அழுத்த ஹார்மோனை குறைக்க தினமும் நடைபயிற்சி செய்வது மிகவும் நன்மை பயக்கும்.
6. பிசிஓடி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் 1000 காலடிகள் நடப்பதன் மூலம் உடல் வலுவாக இருக்கும். முக்கியமாக பிசிஓடி பிரச்சினையால் ஏற்படும் பலவீனம் மற்றும் சோர்வு நீங்கும். இன்னும் சொல்லப் போனால் பிசிஓடி இருக்கும் பெண்கள் தினமும் 1000 அடிகள் நடப்பதன் மூலம் பல உடல் ஆரோக்கிய நன்மைகளை பெறலாம் என்று நிபுணர்கள் சொல்லுகின்றன.