வெறித்தனமான கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் ‘கார்த்தி 29’?

3 hours ago
ARTICLE AD BOX

கார்த்தி 29 திரைப்படம் வெறித்தனமான கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.வெறித்தனமான கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் 'கார்த்தி 29'?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் கார்த்தி தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்தாண்டு வெளியான மெய்யழகன், கங்குவா ஆகிய படங்களில் நடித்திருந்தார் கார்த்தி. அதே சமயம் தற்போது இவர் வா வாத்தியார், சர்தார் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர், கைதி 2 படத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்கிடையில் இவர், டாணாக்காரன் படத்தின் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் தனது 29 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியிருக்கிறார். கார்த்தி 29 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே வெளியானது. வெறித்தனமான கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் 'கார்த்தி 29'? அதைத்தொடர்ந்து இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த படம் குறித்த கூடுதல் தகவல் என்னவென்றால், இப்படமானது ராவான, வெறித்தனமான கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகப் போகிறது என புதிய அப்டேட் கிடைத்துள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனவும் மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article