ARTICLE AD BOX
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. வழக்கமாக மார்ச் மாதத்தில் தொடங்கும் கோடை வெயில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்கி உள்ளது. கோடை வெயில் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்ள வீடுகளில் பானைகள் வாங்கி வைத்து அதில் தண்ணீர் ஊற்றி குளிர்ச்சியாக குடிப்பது வழக்கம்.
இதற்காக பானைகள் விற்பனை துவங்கி உள்ளது. திருப்பூர் தாராபுரம் சாலை கோட்டை மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள மண்பானை கடைகளில் மதுரையில் இருந்து கொண்டுவரப்பட்ட குழாய் பொருத்திய மண்பானைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதை தரம் மற்றும் அளவுக்கு ஏற்றவாறு ரூ.200 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது.
The post வெயில் தாக்கத்தால் மண் பானை விற்பனை மும்முரம் appeared first on Dinakaran.