ARTICLE AD BOX
கோடை காலத்தில் பூண்டு அதிகமாக சாப்பிட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை குறித்து இங்கு காணலாம்.

Dangers of Eating Too Much Garlic in Summer : பொதுவாக நம்முடைய உணவுப் பழக்கங்கள் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும். கோடையில் உடல் மற்றும் வெப்பநிலை அதிகமாகவே இருக்கும். எனவே இந்த சீசனில் குளிர்ந்த பொருட்களை சாப்பிட வேண்டும் என்றும், சூடாக இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் தங்களது உடல் ஆரோக்கியத்தை குறித்து ரொம்பவே கவனமாக இருக்கிறார்கள். குறிப்பாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காக பலவற்றை சாப்பிடுகிறார்கள். அவற்றில் ஒன்றுதான் பூண்டு.

பூண்டு சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள். இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமில்லாமல், ஏராளமான மருத்துவ குணங்களால் நிறைந்துள்ளது. இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் நம்முடைய ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்க உதவும். தூண்டில் வைட்டமின் ஏ வைட்டமின் பி வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன அதுபோல இதில் இரும்பு கொழுப்பு மற்றும் புரதங்களும் உள்ளன. தூண்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் தொற்று நோயிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்தவும் உதவும்.

பூண்டு நம்முடைய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. இது சளி, இருமல், ஆஸ்துமா போன்றவற்றிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தவிர உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பூண்டு உதவுகிறது. பூண்டில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பண்புகள் தலைவலி, மறதி, பல் வலி போன்ற பாதிப்புகளையும் குறைக்க உதவும்.
இதையும் படிங்க: முடி உதிர்தல் முதல் பொடுகு தொல்லை வரை.. ஒரே தீர்வு 'பூண்டு' இப்படி யூஸ் பண்ணுங்க!!

வெயில் காலத்தில் பூண்டை எப்போதும் போல பயன்படுத்தலாமா? என்ற சந்தேகம் நம்மில் சிலருக்கும் இருக்கும். கோடையில் பூண்டை மிதமான அளவில் எடுத்துக் கொண்டால் எந்தவித தீங்கும் ஏற்படாது என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் பூண்டில் உடல் வெப்பநிலை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன. எனவே வெயில் காலத்தில் பூண்டை அதிகமாக எடுத்துக் கொண்டால் ஒவ்வாமை போன்ற சில பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். முக்கியமாக கோடையில் பூண்டை அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் வெப்பம் அதிகரித்து அசெளகரியமாக உணருவீர்கள்.
இதையும் படிங்க: தினமும் பூண்டை நெய்யில் வறுத்து சாப்பிடுங்க; நடக்கும் ஆச்சரியம் பாருங்க!

அதுபோல பூண்டில் அல்லிசின் என்ற கலவை உள்ளதால், இதை அதிகமாக எடுத்துக் கொண்டால் கல்லீரல் சேதத்தை ஏற்படுத்திவிடும். அதுவும் குறிப்பாக பச்சை பூண்டை கோடையில் சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல. விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பூண்டு ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது தான். ஆனால் கோடைகாலத்தில் இதை அதிகமாக சாப்பிட்டால் மோசமான சில பக்க விளைவுகளை தான் ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.