ARTICLE AD BOX
கோடைகால வெயிலில் இருந்து முடியை பாதுகாக்க சிம்பிள் டிப்ஸ்கள் இங்கே.

Hair Care Tips For Summer : அடர்த்தியான, பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான கூந்தல் யாருக்கு தான் பிடிக்கிறது. ஆனால் இந்த கோடை காலம் நம்முடைய சருமத்தை மட்டுமில்லாமல், முடியையும் மோசமாக பாதிக்கும். சுட்டெடுக்கும் வெயிலால் தலைமுடி உயிரற்றதாகிவிடும் இத்தகைய சூழ்நிலையில் கூந்தலுக்கு கூடுதல் கவனிப்பு தேவை. சூரிய ஒளி, மாசுபாடு, தூசி, அழுக்கு மற்றும் மோசமான உணவு பழக்கவழக்கங்களால் தலைமுடி உயிரற்றதாகிறது. எனவே கோடை சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தலை முடியை இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள 8 விஷயங்களை மட்டும் செய்தால் போதும்.

கோடைகாலத்தில் கடுமையான சூரிய ஒளியிலிருந்து உங்களது தலைமுடி சேதமடையாமல் இருக்க, உங்களது தலைமுடியை ஒரு தொப்பி, கைகுட்டை அல்லது ஸ்டோல் கொண்டு மூட வேண்டும்.
தலை முடியை சுத்தமாக வைக்கவும்:
கோடைகாலத்தில் உங்கள் தலைமுடியில் அதிக அழுக்கு மற்றும் வியர்வை சேரும். இதனால் தலைமுடி அதிகமாக உதிரும். இத்தகைய சூழ்நிலையில் முடியை சுத்தமாக வைப்பது ரொம்பவே முக்கியம். குறிப்பாக எண்ணெய் பசை முடி உள்ளவர்கள் மற்றும் அதிக வியர்வை உள்ளவர்கள் கண்டிப்பாக தங்களது தலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதற்கு அவ்வப்போது தலைக்கு குளிக்கலாம்.
இதையும் படிங்க: Summer Hair Care Tips : கோடையில் உங்கள் கூந்தல் வளர இந்த டிப்ஸ் அப் பாலோ பண்ணுங்க!!

தலைக்கு ஷாம்பு போட்டு குளிப்பதற்கும் முன் தேங்காய் எண்ணெய் அல்லது உங்களுக்கு பிடித்த வேறு ஏதாவது எண்ணெய் கொண்டு தலைமுடியை நன்கு மசாஜ் செய்ய வேண்டும். எண்ணெய் தடவி மசாஜ் செய்த பிறகு சுமார் ஒரு மணி நேரம் கழித்து தான் தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். ஒருவேளை உங்களது தலைமுடி ரொம்பவே வறண்டு போய் இருந்தால் முந்தைய நாள் இரவு எண்ணெய் மசாஜ் செய்து பிறகு மறுநாள் ஷாம்பு போட்டு குளிக்கலாம். இப்படி செய்வது உங்களது தலை முடிக்கு நல்ல ஈரப்பதத்தை அளிக்கும்.
நல்ல ஷாம்பு மற்றும் கண்டிஷனர் :
கோடைகாலமாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி தலைமுடிக்கு நல்ல ஷாம்பு மட்டும் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக ரசாயனங்கள் இருக்கக் கூடாது. இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஷாம்பு மற்றும் கண்டிஷனர் முடியை ஆரோக்கியமாக வைக்க உதவும். இதனால் முடியில் வறட்சி ஏற்படாது. மேலும் முடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.

ஹேர் ஸ்ட்ரைட்டனர், ட்ரையர் போன்ற எந்த ஒரு கருவிகளையும் தலைமுடிக்கு பயன்படுத்த வேண்டாம். இதனால் முடி உடைந்து விடும். அவை உங்களது தலை முடியை சேதப்படுத்தி, பலவீனமாக்கும் மற்றும் வறட்சியாகும். எனவே இந்த மாதிரியான கருவிகளை முடிந்த வரை குறைவாக பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.
தலைமுடியை ஈரமாக வையுங்கள்:
கோடை வெயிலால் முடி வறண்டு போகும். எனவே வறண்டு போன கூந்தலை அவ்வப்போது ஈரமாக்குவது மிகவும் அவசியம். இதற்கு கடையில் ஸ்ப்ரே பாட்டில் ஒன்றை வாங்கி அதில் தண்ணீருடன் லாவண்டர் எண்ணெய் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். (லாவண்டர் எண்ணெயை அதிகமாக சேர்க்க வேண்டாம்). முடி எப்போதெல்லாம் வறண்டு போகின்றதோ அப்போது இந்த தண்ணீரை உங்களது தலைமுடி மீது தெளிக்கவும். இதனால் முடி வறண்டு போகாது. இது முடிக்கு மாய்சர்ரைசர் போல் செயல்படும்.
இதையும் படிங்க: Parenting Tips : கொளுத்தும் கோடை வெயில்.. குழந்தைகளின் தலைமுடியை பராமரிக்க பெஸ்ட் டிப்ஸ் இதோ!!

தற்போது கடைகளில் சீரம் கிடைக்கிறது இது முடிக்கு சேதாரம் ஏற்படுத்தாது. ஏனெனில் இதுவும் ஒருவிதமான எண்ணெய் தான். அதாவது எண்ணெயிலிருந்து கொழுப்பை நீக்கி பிறகு பெறக்கூடியது தான் சீரம். இதை நீங்கள் தினமும் தேய்த்தால் கூட தலைமுடிக்கு எந்தவித பிரச்சனையும் வராது. எல்லா வயதினரும் இதை உபயோகப்படுத்தலாம் இது உங்களது தலைமுடியை வெயிலிலிருந்து பாதுகாக்கும். குறிப்பாக இது கூந்தல் நிறத்தை மாற்றாது.
ஹேர் மாஸ்க்:
வெயில் காலத்தில் வாரத்திற்கு இரண்டு முறை கண்டிப்பாக குளிக்க வேண்டும். அப்படி நீங்கள் குளிக்கும் முன் கண்டிப்பாக ஏதாவது ஒரு ஹேர் மாஸ்க் போடவும். மாஸ்க் போட்ட பிறகு 10-15 அப்படியே வைத்துவிட்டு பிறகு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். ஹேர் மாஸ்க் போட்டால் கோடை வெயிலால் முடி டேமேஜ் ஆகாது.